சென்னை: மூன்று ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2008, 2009, 2010 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தவறியவர்கள், வரும் அக்., 18ம் தேதிக்குள், இணையதளத்திலோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.