முதுகலை பட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 31 விண்ணப்பிக்கலாம் | Kalvimalar - News

முதுகலை பட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 31 விண்ணப்பிக்கலாம்

எழுத்தின் அளவு :

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் 2012 - 2013 ஆண்டில் காலியாக உள்ள முதுகலை மற்றும் எம்.பில்., படிப்புகளுக்கு ஆக., 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

எம்.ஏ., மலையாளம், தெலுங்கு, கன்னடம், வரலாறு, பொருளியல், மொழியியல், சமூக அறிவியல், சமூகவியல், சமஸ்கிருதம், ஆங்கிலம் மொழியியல், தத்துவம் மற்றும் சமயம், பிரெஞ்ச்.எம்.எஸ்சி., இ-மீடியா கம்யூனிகேஷன், சுற்றுச்சூழல் அறிவியல், கம்யூனிகேஷன் அன்ட் ஜர்னலிஷம், புவி தொலையுணர்வு.

எம்.பில்., மொழியியல், சுற்றுச்சூழல் அறிவியல், சமூக அறிவியல், சமூகவியல், தொடர்பியல் கல்வி, உலோக அறிவியல், தெலுங்கு, வரலாறு, சமஸ்கிருதம், வேதங்கள், ஆங்கில மொழியியல், மலையாளம், அமைதியாக்கம் மற்றும் காந்திய சிந்தனை, சிவ சித்தாந்த தத்துவம், மதங்கள் ஒப்பீடு மற்றும் கிறிஸ்டியன் ஸ்டடிஸ், நாட்டுப்புறவியல், பிரெஞ்ச்.

எம்.பிஎட்., எம்.எல்.ஐ.எஸ்சி., எம்.பி.ஏ., (ஹாஸ்பிட்டல் நிர்வாகம்) மற்றும் எம்.பி.ஏ., மாலை நேர வகுப்புகள் மற்றும் புவியியல் தகவல் முறை மற்றும் தொலைஉணர்வியல் பட்டய படிப்பு.

இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அந்தந்த துறை தலைவர்களிடம் 31.8.2012க்குள் உரிய கல்வி சான்றுகளுடன் சென்று அட்மிஷன் பெற்றுக்கொள்ளலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடக்கும் என பல்கலை பதிவாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார்.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us