டெல்லி: பிரிட்டன் - இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ்(UK-India Education and Research Initiative - UKIERI), உதவித்தொகை பெறுவதற்கான செயல்திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலா ரூ.50,000 வரையிலான 10 உதவித்தொகைகள் இத்திட்டத்தில் அடக்கம். இந்தியா - பிரிட்டன் - அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த ஆராய்ச்சி உதவித்தொகை திட்டமாக இது உள்ளது. இதற்கு தேர்வாகும் மாணவர்கள், 2 வருடங்கள் வரை இந்த உதவித்தொகையைப் பெற முடியும்.
இந்த மூன்று நாடுகளிலுள்ள கல்வி நிறுவனங்களின் துறைத் தலைவர்களால், ஆராய்ச்சிப் பணிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படும். அனைத்து செயல்திட்டங்களும், 3 கல்வி நிறுவனங்களின்(3 நாடுகளைச் சேர்ந்த) கூடுதல் பங்களிப்புத் தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.