முதலிடத்தில் ஐ.ஏ.எஸ்., | Kalvimalar - News

முதலிடத்தில் ஐ.ஏ.எஸ்.,ஜூலை 17,2017,16:20 IST

எழுத்தின் அளவு :

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், 20க்கும் மேற்பட்ட பதவிகளில் விருப்பமானதை தேர்வு செய்ய முடியும். ஆனால், தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., பதவியே இளைஞர்களின் முதல் விருப்பமாக இருக்கிறது, என்கிறது ஆய்வு!

அதிகாரம், ஊதியம், சலுகைகள் ஆகியவற்றிற்கும் மேலாக, சமூக மதிப்பிற்காக இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.,) பதவிக்கே பலரும் ஆசைப்படுகின்றனர்.

இந்திய வெளியுறவு பணி (ஐ.எப்.எஸ்.,) இரண்டாம் தேர்வாக உள்ளது. அதிகம் அறிவு சார்ந்ததாகவும், அமைதியும் பணித் தன்மைகளாக நிறைந்திருப்பதே இதற்கு காரணமாம்!

மூன்றாம் சிறந்த தேர்வாக, இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.,) அங்கம் வகிக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களான பிகார் மற்றும் ஒடிசாவில் இருந்து சிவில் சர்வீசஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம், டில்லி, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடு மற்றும் அதிக ஊதியம் தரும் பணியை நோக்கி செல்வது, இதற்கு முக்கிய காரணமாம்!

கொஞ்சம் சிந்திங்க பாஸ்...


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2017 www.kalvimalar.com.All rights reserved | Contact us