அபிஜெயில் டிசைனிங் சேர்க்கை | Kalvimalar - News

அபிஜெயில் டிசைனிங் சேர்க்கை

எழுத்தின் அளவு :

அபிஜெய் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் கல்வி நிறுவனத்தில் 2012-2013ம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை, முதுகலை டிப்ளமோ படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:
பி.டி.டெக்., (பேஷன் டிசைன். இன்ட்டீரியர் டிசைன், கிராபிக் டிசைன், அனிமேஷன் அன்ட் மல்டி மீடியா)

மஸ்டர் ஆப் டிசைன் (பேஷன் டிசைன், இன்ட்டீரியர் டிசைன், கிராபிக் டிசைன்)

பி.ஜி.டி.டி., (பேஷன் டிசைன். இன்ட்டீரியர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், அக்சசரி டிசைன், அப்லைடு ஆர்ட், பிலிம் புரோடக்ஷன், அனிமேஷன் அன்ட் வெப் டிசைனிங், பைன் ஆர்ட்)

இளநிலை பட்டப்படிப்பில் சேர +2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஏப்ரல் 20 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாளாகும்.

மேலும் விரிவான தகவல்கள் பெற http://www.apeejay.edu/aid/admission.html என்ற இணையதளத்தின் வழியாக அறியலாம்.

Search this Site

மேலும்