பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு | Kalvimalar - News

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடுமே 19,2017,10:26 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு இன்று (19-05- 2017) வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு ’ரேங்கிங்’ முறை கிடையாது’ என, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி தொடங்கிய தேர்வு மார்ச்  30ம் தேதி வரை நடைபெற்றது. 

இதில், 10 லட்சத்து 25 ஆயிரத்து 909 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதினர். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

மொத்தம் உள்ள 12,188 மேல்நிலை பள்ளிகளில், 1,557 அரசு பள்ளிகள் உட்பட 5,059 பள்ளிகள், 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன. 96.2 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்த ஆண்டும் மாணவியர் மாணவர்களைவிட 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். 

பிளஸ் 2வை போன்று பத்தாம் வகுப்பு தேர்விலும் மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களுக்கான பட்டியல் வெளியாகவில்லை. 

பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், அவர்கள் குறிப்பிட்டு கொடுத்துள்ள மொபைல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டது.




வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2017 www.kalvimalar.com.All rights reserved | Contact us