இழுபறியாகிறது இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் | Kalvimalar - News

இழுபறியாகிறது இலவச எல்.கே.ஜி., அட்மிஷன்ஏப்ரல் 21,2017,12:03 IST

எழுத்தின் அளவு :

இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு, தனியார் பள்ளிகள் சார்பில், ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தியதால், பெற்றோர் அலைக்கழிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள், தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பு முதல், கல்வி கட்டணம் இன்றி படிக்கலாம்.

இதற்கு நேற்று முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் துவங்கின. இதன்படி, கோவை மாவட்டத்தில், 50 விண்ணப்பங்கள், நேற்று ஆன்லைனில் பதிவேற்றப்பட்டன. மே 18ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இ - சேவை மையங்கள் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் (ஏ.இ.இ.ஓ.,), இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பல ஏ.இ.இ.ஓ., அலுவலகங்களில், டைப்பிஸ்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடம் காலியாக உள்ளன.

அலுவலர்களுக்கும், கணினி பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. இதனால், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், தனியார் பள்ளி நிர்வாகத்தினரே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இ- சேவை மையங்களில், இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு விண்ணப்பிக்க, 100 ரூபாய் வரை, கமிஷன் பெறப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ம.தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில்,”இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை வரவேற்கத்தக்கது.

இப்பணியை, தனியார் பள்ளிகளே மேற்கொள்ள அறிவுறுத்தியிருப்பதால், பெற்றோர் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. பள்ளிகள் சார்பில், பெற்றோருக்கு அளிக்கப்படும் ஒப்புகை சீட்டு தொலைந்துவிடும் பட்சத்தில், சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.

இதற்கு பதிலாக, மே இறுதியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு, கவுன்சிலிங் நடத்துவது போல, இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு, கவுன்சிலிங் நடத்த முன்வர வேண்டும். இதன் வாயிலாக, தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ’சீட்’களால், ஏழை மாணவர்கள் பலனடைவர்,” என்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2017 www.kalvimalar.com.All rights reserved | Contact us