ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து வசதிகள் | Kalvimalar - News

ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து வசதிகள்செப்டம்பர் 02,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆஸ்திரேலியாவில் பலவிதமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் பொது போக்குவரத்து அமைப்பானது, பாதுகாப்பானதும், கட்டுபடியாகக்கூடியதுமாகும். சில சமயங்களில் அது இலவசமாகவும் கிடைக்கும். நீங்கள் எந்த நகரத்தில் மற்றும் மாநிலத்தில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து போக்குவரத்து வசதிகள் மாறுபடுகின்றன. அங்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், இதுபற்றி நன்கு அறிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை முறை சிரமமின்றி அமையும்.

சிட்னி

சிட்னி நகரத்தில் உள்ள போக்குவரத்து வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள www.131500.com.au என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

மெல்போர்ன்

இந்நகரத்தினுடைய போக்குவரத்து வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள www.metlinkmelbourne.com.au என்ற இணையதளம் செல்லவும்.

பிரிஸ்பேன்

இந்நகரத்தினுடைய போக்குவரத்து வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள www.translink.com.au என்ற இணையதளம் செல்லவும்.

பெர்த்

இந்நகரத்தினுடைய போக்குவரத்து வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள www.transperth.wa.gov.au என்ற இணையதளம் செல்லவும்.

அடிலெய்டு

இந்நகரத்தினுடைய போக்குவரத்து வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள www.adelaidemetro.com.au என்ற இணையதளம் செல்லவும்.

ஹோபர்ட்

இந்நகரத்தினுடைய போக்குவரத்து வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள www.metrotas.com.au என்ற இணையதளம் செல்லவும்.

கான்பெரா

இந்நகரத்தினுடைய போக்குவரத்து வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள www.action.act.gov.au என்ற இணையதளம் செல்லவும்.

டார்வின்

இந்நகரத்தினுடைய போக்குவரத்து வசதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள www.nt.gov.au/transport/public என்ற இணையதளம் செல்லவும்.

ஆஸ்திரேலியாவின் பல பொதுப்போக்குவரத்து அமைப்புகளில் பயணம் செய்வதற்கு, பயணத்தை தொடங்குவதற்கான சிறிதுநேரம் முன்பாக, சம்பந்தப்பட்ட இடங்களில் டிக்கெட் வாங்கினால் போதுமானது.

மாநிலங்களுக்கிடையேயான பயணம்

ஆஸ்திரேலியா பரப்பளவு ரீதியில் பெரிய நாடு. சாதாரணமாக, ஒரு வெளிநாட்டுப் பயணி, சிட்னியிலிருந்து பேருந்து மூலமாக மெல்போர்ன் சென்றுவிடலாம் என நினைக்கிறார் என்றால், அதற்கு 13 மணி நேரங்கள் எடுக்கும். பெரும்பாலான மக்கள் விமானப் பயணத்தையே விரும்புகிறார்கள். உள்நாட்டுப் பயணத்திற்கு, அந்நாட்டில் அதிகளவிலான விமான சேவைகள் உள்ளன. இவற்றில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, டிராவல் ஏஜென்ட் மூலமாகவும், தொலைபேசி அல்லது இணையத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

மேலும், நகரங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு, பேருந்து மற்றும் ரயில் பயணங்கள் ஏற்றவை. ரயில் பயணம் பற்றிய விபரங்களை அறிய www.railaustralia.com.au என்ற இணையதளத்திற்கும், பேருந்துப் பயணம் பற்றி அறிய www.buslines.com.au என்ற இணையதளத்திற்கும் செல்லவும்.

சொந்த வாகனம்

நீங்கள் ஆஸ்திரேலியாவில் அதிககாலம் தங்கியிருக்க விரும்பினால், நல்ல நிலையிலுள்ள ஒரு இரண்டாம்தர சைக்கிளை A$200 -விற்கும், நல்ல நிலையிலுள்ள ஒரு இரண்டாம்தர காரை A$10,000 -விற்கு குறையாமலும் வாங்கலாம்.

நீங்கள் கார் வாங்கினால், பதிவு செய்தல், ரிப்பேர் செய்தல், எரிபொருள், இன்சூரன்ஸ் மற்றும் சேவைக் கட்டணம் போன்ற அனைத்திற்கும் நீங்கள்தான் பொறுப்பு. அனைத்து இயந்திர வாகனங்களும், சாலையில் செல்லும் முன்பாக கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவை உங்கள் பெயரில் செய்ய வேண்டும். உங்களது ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆஸ்திரேலிய முகவரியையும் தர வேண்டும்.  பதிவுசெயதல் பற்றிய விபரங்களை அறிய www.australia.gov.au என்ற இணையதளம் செல்லவும்.

ஆஸ்திரேலியாவில், உங்களது தங்கும் காலம் 3 மாதங்களுக்கு மிகாமல் இருந்தால், சர்வதேச ஓட்டுநர் உரிமம் மற்றும் செல்லத்தக்க சர்வதேச ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். உங்களது ஆவணம் ஆங்கிலத்தில் இல்லையெனில், நீங்கள் மொழிபெயர்ப்பையும் வைத்திருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு மேலாக நீங்கள் அங்கே இருந்தால், உரிய விதிமுறைகளின்படி, அந்நாட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டும். இதுதொடர்பான விரிவான விபரங்களைப் பெற, நீங்கள் வாழும் மாநிலத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரியை அணுகவும்.

வாகனத்தை ஓட்டும்போது நினைவில் வைக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகள்

* ஆஸ்திரேலியாவில், சாலையின் இடதுபுறமே வாகனத்தை ஓட்டுகிறார்கள்.

* சீட் பெல்ட் அணிவது அங்கு கட்டாயம். பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கும் அது கட்டாயம்.

* ஆஸ்திரேலியாவில் 18 வயதுதான் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியான வயது. சில மாநிலங்களில் 17 வயதிலும் வாகனம் ஓட்டலாம்.

* ஆஸ்திரேலியாவில் குடித்து விட்டு சாலையில் வாகனம் ஓட்டுவது கடுமையான குற்றம்.

* மக்கள் வாழுமிடங்களில் மணிக்கு 50கி.மீ வேகத்திலும், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 110கி.மீ வேகத்திலும் செல்லலாம். உங்களின் வேகத்தை, அனைத்து இடங்களிலும் கண்காணிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் அங்குண்டு.

* இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் ஓட்டும்போது ஹெல்மட் கட்டாயம் அவசியம். அதற்கு ஓட்டுநர் உரிமமும் வேண்டும்.

* வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசுவது குற்றம். இதற்கான அபராதம் அதிகம்.

டாக்ஸி

அனைத்து முக்கிய பெருநகரங்கள் மற்றும் நகரங்களிலும் மீட்டர் பொருத்தப்பட்ட டாக்ஸிகள் ஓடுகின்றன. நீங்கள் தொலைபேசி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ அல்லது போக்குவரத்து மையங்களில், முக்கிய ஹோட்டல்களில் மற்றும் வணிக வளாகங்களில் வெளியிடப்படும் தகவல்கள் மூலமாகவோ டாக்ஸி பயணத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம். மேலும், சாலையில்கூட டாக்ஸியை ஏற்பாடு செய்து கொள்ளலாம். டாக்ஸியின் மேல்புறத்தில் விளக்கு எரிந்தால், அந்த டாக்ஸி காலியாக இருக்கிறது என்று அர்த்தம். குறிப்பிட்டளவு தூரத்திற்கு குறைந்த கட்டணமும், அதன் பிறகான ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us