வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறேன். சாதாரண மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது சரியா? | Kalvimalar - News

வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறேன். சாதாரண மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது சரியா?ஆகஸ்ட் 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எல்லாம் படிக்க ஆள் கிடைக்காமல் இந்தியாவில் உள்ள ஏழை மாணவர்களுக்கு அந்த பல்கலைக்கழகங்கள் ஸ்காலர்ஷிப்களை அள்ளித் தர காத்திருப்பது போல நம் பெற்றோர்களும் மாணவர்களும் நம்பி வெளிநாட்டுக் கல்வி பற்றிய கனவுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் எல்லாமே பணம் தான் என்பதை நினைவில் கொள்வது மிக முக்கியம். அதேபோல அங்கே படிப்பவர் அனைவருக்குமே படித்த உடனேயே வேலைகள் கிடைக்குமென எண்ணுவதும் அசட்டுத் தனம் தான். 

வெளிநாட்டுப் படிப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் கவனிக்க வேண்டியவை இதோ..
நாம் தேர்வு செய்துள்ள படிப்புக்கு ஸ்காலர்ஷிப்கள் கிடைக்குமா? அது இல்லாதபோது நம்மால் இந்தச் செலவை ஏற்க முடியுமா? படிப்புக்குத் தேவையான தகுதிகள் உள்ளனவா?

படிக்க விரும்பும் கல்வி நிறுவனம் தரமானது தானா?, படிக்க விரும்பும் படிப்பானது தரமானதுதானா? நமக்குப் பொருந்தக் கூடியதா? தங்கும் வசதிகள் எப்படி? செலவு எவ்வளவாகும்?

இந்தக் கேள்விகளுக்கு சரியான விடையை அறிந்து கொண்டு அதற்கேற்பவே உங்களது வெளிநாட்டு படிப்பு பற்றிய கனவை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us