பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். | Kalvimalar - News

பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு பற்றிக் கூறவும்.ஜூலை 28,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மாலிகூலர் பயாலஜி துறையில் நவீன ஆய்வுகளுக்கு ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதே பயோ இன்பர் மேடிக்ஸ் என அழைக்கப்படுகிறது.

இதில் பயாலஜி தொடர்பான ஏராளமான தகவல்கள் திரட்டப்பட்டு, பகுத்தாய்வு செய்யப்பட்டு, இணைக்கப்படுகின்றன. இதனால் புதிய பரிமாணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மனித வாழ்வு மேம்பாட்டுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உடல் நலம், சுற்றுச்சூழல், விவசாயம், பயோடெக்னாலஜி மற்றும் சக்தி ஆகிய துறைகளில் பயோஇன்பர்மேடிக்ஸ் பயன்பாடு இப்போது அதிகமாக உணரப்படுகிறது. இதனால் இந்த படிப்புக்கு தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது.

பயோஇன்பர்மேடிக்ஸில் கால் பதிக்கும் ஒருவர் பயோடெக்னாலஜிக்கும் செல்ல முடியும். மேலும் பயோமெடிக்கல், பார்மாசூடிக்கல் சயின்ஸ், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்கள் என எண்ணற்ற வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ஜெனிடிக்ஸ், வேதியியல், மாலிகூலர் பயாலஜி, மைக்ரோபயாலஜி, வெடினரி சயின்ஸ், பார்மசி, கணிதம், இயற்பியல், ஐ.டி. ஆகியவற்றில் பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தி ருப்பவர் இதில் மேற்படிப்பு படிக்கலாம்.

இதில் பி.டெக்., பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகள் தரப்படுகின்றன. எம்.டெக். படிப்பும் இருக்கிறது. டேட்டாபேஸ் டிசைன் மற்றும் பராமரிப்பு, சீக்வென்ஸ் அசெம்பிளி, புரோட்டோமிக்ஸ், கிளினிகல் பார்மகாலஜிஸ்ட், சீக்வென்ஸ் அனலிசிஸ், இன்பர்மேடிக்ஸ் டெவ லப்பர், பயோ அனலிஸ்ட் ஆகிய பணிகளில் பல வாய்ப் புகள் இன்று காத்திருக்கின்றன.

விப்ரோ, ரிலையன்ஸ், சத்யம், டி.சி.எஸ்., அக்செல்ரிஸ், ஐ.பி.எம். லைப் சயின்சஸ், சிலிகான் ஜெனிடிக்ஸ், டெஸ்ஸெல்லா ஆகிய நிறுவனங்களில் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பவர்கள் நல்ல சம்பளத்திற்கு பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us