கோயம்புத்தூரில் பைலட் பயிற்சி பெற முடியுமா? இதற்கு எவ்வளவு செலவாகும்? என்ன தகுதி தேவை? | Kalvimalar - News

கோயம்புத்தூரில் பைலட் பயிற்சி பெற முடியுமா? இதற்கு எவ்வளவு செலவாகும்? என்ன தகுதி தேவை?ஜூலை 28,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பைலட் பயிற்சி பெற ஒருவர் பிளஸ் 2வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் படித்திருப்பது அவசியம்.

இந்தப் பயிற்சியை நாடெங்கும் பல நிறுவனங்கள் நடத்துகின்றன. எனினும் இதை மத்திய சிவில் ஏவியேஷன் இயக்ககம் அங்கீகரித்துள்ள பயிற்சி மையம் ஒன்றில் படிப்பது மட்டுமே அறிவுறுத்தப் படுகிறது. பைலட் பயிற்சி பெற சிறப்பான உடற் தகுதிகளும் தேவை.

எனவே எந்த மருத்துவ அதிகாரியிடம் இதை உறுதி செய்து கொள்வது என்பதையும் நீங்கள் படிக்க விரும்பும் பயிற்சி மையம் அங்கீகரிக்கப்பட்டதுதானா என்பதையும் தீதீதீ.ஞீஞ்ஞிச்.ணடிஞி.டிண தளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

முதலில் நீங்கள் கமர்ஷியல் பைலட் லைசென்சுக்கான பயிற்சியை பெற வேண்டும். விமான ஓட்டும் பயிற்சியை உள்ளடக்கியிருப்பதால் பொதுவாக பைலட் பயிற்சியானது கடுமையான செலவுகளை உள்ளடக்கியுள்ளது. தோராயமாக 17 முதல் 20 லட்சம் வரை இதற்குச் செலவாகிறது.

கோயம்புத்தூர் சிவில் ஏரோடிராமில் உள்ள கோயம்புத்தூர் பிளையிங் கிளப்பில் இந்த பயிற்சியை நீங்கள் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us