ரோபோட்டிக்ஸ் என்பது நல்ல வாய்ப்புகளைக் கொண்ட துறை தானா? இதை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

ரோபோட்டிக்ஸ் என்பது நல்ல வாய்ப்புகளைக் கொண்ட துறை தானா? இதை எங்கு படிக்கலாம்?ஜூலை 28,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கம்ப்யூட்டரின் உதவியோடு வடிவமைக்கப்படும் ரோபோ எனப்படும் செயற்கை உருவங்களை நாம் அறிவோம். இவற்றை வடிவமைக்கும் இன்ஜினியரிங் துறையே ரோபோடிக்ஸ் எனப்படுகிறது. உற்பத்தித் துறையில் கூட இன்று ரோபோடிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதனால் செயல்படும் வேகமும் திறனும் நேர்த்தியும் பன் மடங்கு அதிகரித்துள்ளன. இத்துறையில் எம்.. படித்தவர் ஐ.எஸ்.ஆர்.. போன்ற விண்வெளி நிறுவனங்களிலும் மைக்ரோசிப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிலும் பணி புரியலாம்.

..டிக்களில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்னும் ஆர்வத்தைத் தூண்டும் துறையிலும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் பயாலஜி என்னும் நிறுவனத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பிரிவுகளில் உதவித் தொகையோடு கூடிய ஆய்வுப் படிப்புகளையும் மேற்கொள்ளலாம்.

நியூக்ளியர் இன்ஜினியரிங், கடல் ஆய்வு, மின்சார சிக்னல் டிரான்ஸ்மிஷன் பராமரிப்பு, பயோமெடிக்கல் உபகரணங்களை வடிவமைப்பது போன்ற துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுவதால் இப் படிப்பின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் ஒன்றில் பி.. அல்லது பி.டெக். முடித்திருப்பவர் இதைப் படிக்கலாம். ரோபோடிக்ஸ் துறையில் கம்ப்யூடேஷனல் ஜியாமெட்ரி, ரோபோ மோட்டார் பிளானிங், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோபிராசஸர், ரோபோ மேனிபுலேட்டர்ஸ் ஆகியவை இப் படிப்பில் கற்றுத்தரப்படுகின்றன.

அமெரிக்காவின் புகழ் பெற்ற ரோபோ நிறுவனமான பிளாஸ்டெக், இன்டல் ஆகியவற்றில் பணி புரியும் வாய்ப்பு இதைப் படிப்பவருக்குக் கிடைக்கிறது.

Search this Site

மேலும்