படைப்பாற்றல் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி | Kalvimalar - News

படைப்பாற்றல் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிநவம்பர் 17,2015,15:52 IST

எழுத்தின் அளவு :

திருப்பூர்: ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி குறித்த பயிற்சி, திருப்பூரில் நேற்று துவங்கியது.

புதிதாக ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., சார்பில் படைப்பாற்றல் கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள், தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்துதல், மாணவர்களிடம் உள்ள படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்தல், தொடர் மதிப்பீடு மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து, முதல் இரண்டு நாட்கள் பயிற்சி தரப்படும். அடுத்த மூன்று நாட்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம் என பாடம் வாரியாக கல்வி கற்பித்தல் குறித்து மாதிரி வகுப்பு நடத்தப்படும். திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் நேற்று துவங்கிய முகாமில்,182 ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 20 வரை பயிற்சி முகாம் நடக்கிறது. 

எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர் ஆர்த்தி கூறுகையில், நடத்தப்பட்ட பாடத்தை தெளிவாக மாணவர்கள் புரிந்து கொண்டனரா என்பதை அறிய, அவர்கள் மனவரைபடம் வரைய வேண்டும்; அந்த வரைபடம் வாயிலாக, மாணவர்கள் பாடத்தை தெளிவாக புரிந்துகொண்டார்களா, என்பதை ஆசிரியர் தெரிந்துகொள்ள முடியும். மாணவர்களுக்கு புரியாத பட்சத்தில், மனவரைபடத்தை கொண்டே மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில், படைப்பாற்றல் கல்வி பயிற்சி தரப்படுகிறதுஎன்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us