ஏ.ஐ.பி.எம்.டி., தேர்வு | Kalvimalar - News

ஏ.ஐ.பி.எம்.டி., தேர்வு

எழுத்தின் அளவு :

ஏ.ஐ.பி.எம்.டி., எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதால், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவ சேர்க்கை நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படாது.

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வை யாரெல்லாம் ஏற்றுக்கொள்வர்?

2014 ஆண்டு AIPMT தேர்வெழுதி தேர்ச்சிபெறும் மாணவர்களுக்காக, நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமுள்ள (காஷ்மீர் மற்றும் ஆந்திரா தவிர) அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதமிருக்கும் இடங்களை நிரப்ப, ஒவ்வொரு கல்லூரியும் நடத்தும் தனித்தனி நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கும், AIPMT தேர்வுக்கும் தொடர்பில்லை.

காஷ்மீர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களைப் பொறுத்தவரை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான மாநில இயக்குநரகம் தனது சொந்த நுழைவுத் தேர்வை நடத்தும். எனவே, இந்த இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த மாணவர்கள், AIPMT தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தனியார் கல்லூரிகள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, அவை தங்களுக்கான தனி நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். உதாரணமாக, வேலூரிலுள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, லூதியானாவிலுள்ள சி.எம்.சி., மற்றும் மணிப்பால் பல்கலைக்கழகம் ஆகியவை, மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, தங்களுக்கான தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகின்றன.

சில தனியார் மருத்துவக் கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொருட்டு, தங்களுக்கான தனி அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. Consortium of Medical, Engineering and Dental colleges, Karnataka (COMEDK) என்பது அதுபோன்ற அமைப்புகளுக்கான ஒரு உதாரணம்.

AIPMT பாடத்திட்டம்

* NEET தேர்வு போன்றே AIPMT -ம் ஒரு தனித்த தேர்வாகும்.

* NEET தேர்வு முறையை, AIPMT தேர்வு ஒத்திருக்கும்.

* மொத்தம் 180 objective type கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

* தேர்வை எழுதி முடிக்க மொத்தம் 3 மணி நேரங்கள் ஒதுக்கப்படும் மற்றும் இத்தேர்வு பேப்பர் - பேனா அடிப்படையிலானது.

* 2014ம் ஆண்டு AIPMT தேர்வுக்கான பாடத்திட்டம், NEET தேர்வுக்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்த பாடத்திட்டமே ஆகும். இரண்டும் ஒன்றுதான்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us