இக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

இக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

டில்லியில் உள்ள இக்னோ பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில், 2014ம் ஆண்டு பி.எட்., படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், இயற்பியல், விலங்கியல் உள்ளிட்ட பல பிரிவுகள், இதில் இடம்பெற்றுள்ளன.

தகுதிகள்:  இளநிலை பட்டப் படிப்பை, 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்டபள்ளிகளில், நிரந்தரம் அல்லது தற்காலிகமாக 2 ஆண்டு முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள், இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நேரடியாக கல்லூரியில் முழுநேர பி.எட்., படிப்புக்கு கால அளவு 1 வருடம். தொலைநிலைக் கல்வியில் இது 2 ஆண்டு படிப்பாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்களை, இக்னோ பல்கலையின் கல்வி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாய்.

நுழைவுத் தேர்வு 2013 ஆக., 18ம் தேதி நடக்கிறது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி: 2013 ஜூலை 15.

மேலும் விபரங்களுக்கு: www.ignou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Search this Site

Copyright © 2017 www.kalvimalar.com.All rights reserved | Contact us