மதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News

மதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.ஜூன் 18,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மதுரையிலுள்ள ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாடிக்கல் சயின்சில் தரப்படும் படிப்புகள் 4 ஆண்டு பி.எஸ். மரைன் இன்ஜினியரிங் மற்றும் 4 ஆண்டு பி.எஸ். நாடிகல் டெக்னாலஜி. 17 முதல் 20 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பிக்கலாம். நிறக்குருடு மற்றும் மாலைக் கண் குறைபாடு இருப்பவர் விண்ணப்பிக்க முடியாது.

பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்திருப்பதுடன் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50% பெற்றிருப்பதும் அவசியம். 2 படிப்புகளுக்கும் பொதுவான விண்ணப்பம் தான். ஆனால் எந்தப் படிப்புக்கான விண்ணப்பம் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை இன்ஸ்டிடியூட்டின் வெப்சைட்டிலிருந்து டவுன்லோட் செய்து கொண்டு ரூ.800க்கான டி.டி.,யை நிரப்பிய விண்ணப்பத்துடன் அனுப்பலாம். இப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது.

முழு  விபரங்களை அறிய:

http://www.rlinstitutes.com 

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us