அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சட்ட நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சட்ட நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

இக்கல்வி நிறுவனம், தனது 5 வருட BA LL.B படிப்பில் மாணவர்களை சேர்க்கும் பொருட்டு, தனது சொந்த நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இந்த சட்டப் படிப்பில் 10 செமஸ்டர்கள் உண்டு. மொத்தம் 220 இடங்களுடன், 3 ஸ்டடி சென்டர்களை கொண்டது. விண்ணப்பத்தை, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இரண்டு முறைகளிலும் நிரப்ப வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.300.

தகுதி

பள்ளி மேல்நிலைப் படிப்பில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். மேலும், 22 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

நுழைவுத்தேர்வு, பொதுவாக, மே மாதத்தில் நடைபெறும்.

தேர்வு

எழுத்துத்தேர்வு மொத்தம் 2 மணிநேரங்கள் நடைபெறும். 75 ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகளும், 10 சுருக்கமாக விடையளிக்கும் கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். பொது ஆங்கிலம், நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு, ரீசனிங் மற்றும் திறனறிதல் ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கேள்விகள் கேட்கப்படும்.

விரிவான விபரங்களுக்கு www.amu.ac.in என்ற இணையதளம் செல்க.

Search this Site

மேலும்