மருத்துவ அறிவியலுக்கான கிருஷ்ணா கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

மருத்துவ அறிவியலுக்கான கிருஷ்ணா கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

இக்கல்வி நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றது. இப்பல்கலையின் கீழ், தற்போது, மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி, நர்சிங் மற்றும் பயோடெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மருத்துவக் கல்லூரியானது, மலேசிய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தான் வழங்கும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, கிருஷ்ணா பல்கலை, தனது சொந்த நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.500 மற்றும் நுழைவுத் தேர்வு கட்டணம் ரூ.1000.

தகுதி

விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மாணவர்கள், பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் சேர்த்து மொத்தமாக 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். OBC வகுப்பை சேர்ந்தவர்கள், 40% மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

நுழைவுத்தேர்வு, பொதுவாக, மே மாதத்தில் நடத்தப்படும்.

தேர்வு

இயற்பியல் 50, வேதியியல் 50 மற்றும் உயிரியல் 100 என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். சாய்ஸ் கிடையாது. அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. தேர்வு 3 மணிநேரங்கள் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு www.kimsuniversity.in என்ற வலைதளம் செல்க.

Search this Site

மேலும்