ஹரப்பா நாகரிகத்துக்கு தமிழகம்தான் தாயகம் என தெரிய வந்துள்ளது: ஆய்வாளர் | Kalvimalar - News

ஹரப்பா நாகரிகத்துக்கு தமிழகம்தான் தாயகம் என தெரிய வந்துள்ளது: ஆய்வாளர்ஜனவரி 04,2015,12:19 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஹரப்பா நாகரிகத்துக்கு, தமிழகம்தான் தாயகம் என, தெரிய வந்துள்ளது. தமிழ் பண்பாட்டுக்கு, இலக்கியமும் ஒரு சான்றாக உள்ளது என, தொல்பொருள் ஆய்வாளர் நடன காசிநாதன் கூறினார்.

சென்னை பல்கலையின், தொன்மை வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, தமிழ் செம்மொழி நிறுவனம் ஆகியன இணைந்து, தமிழ் கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியத்தில், தமிழர்களின் கலை, இலக்கிய பண்பாட்டு பதிவுகள் என்ற கருத்தரங்கை நடத்தின.

இதில், நடன காசிநாதன் பேசியதாவது: இலக்கியங்கள் பெரும்பாலும், உண்மை நிகழ்வை கூட்டிச் சொல்வதாகவும், கற்பனைகள் நிறைந்ததாகவும் உள்ளன. அவற்றை, வரலாற்று ஆதாரமாக ஏற்க முடியாது என்ற கருத்து, பரவலாக உள்ளது. ஆனால், தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும், பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகின்றன. அவற்றில், சில கற்பனை சேர்ந்து இருந்தாலும், அவை அனைத்தையும் ஆதாரமற்றவை என, ஒதுக்கிவிட முடியாது.

பெரிய புராணத்தில், நின்ற சீர் நெடுமாற பாண்டியன் குறித்த குறிப்புகள் உள்ளன. இதே குறிப்புகள், மதுரை அருகே அண்மையில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள், கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல சம்பவங்கள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளிலும் ஒத்து உள்ளன. கொற்கை பாண்டியனின் நாணயங்கள் குறித்து, தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 18 வகையான மொழிகள் இருந்தன. இவை, முந்தைய காலத்தில், குறி வடிவில் இருந்தன. பிந்தைய காலத்தில், எழுத்து வடிவாக மாறின. இதற்கான ஆதாரங்கள் பல, தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள், ஹரப்பா நாகரிகத்துடன் ஒத்துள்ளன. தமிழகத்தில் வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள், வெண்கல பாத்திரங்கள், கட்டடக் கலை, சித்திரம் போன்றவை, ஹரப்பாவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஹரப்பா நாகரிகத்துக்கு, தமிழகம்தான் தாயகம் என, தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

ஆய்வாளர் வெங்கடேசன் பேசியதாவது: தொடர் தொல்பொருள் ஆய்வுகள் மூலம், முந்தைய கால பண்பாடு, நாகரிகம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதற்கு, இளைஞர்கள் பெருமளவில் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


வாசகர் கருத்து

arumai
by பிரகாஷ்,India    07-ஜன-2015 11:19:04 IST
தமிழ் எங்களின் தாய் மொழி
by jayachandran,India    05-ஜன-2015 20:38:07 IST
இதைதான் பல வெளிநாட்டு அறிஞர்களும் கூறி வருகிறார்கள். ஒரு முறை முரளி மனோகர் ஜோஷி அவர்களிடம் இது பற்றி வினவியபோது "அது இந்திய நாகரிகம்" என்றார் பொத்தாம் பொதுவாக. என் என்றால் ஆரிய நாகரிகம் என்று சொல்ல ஆதாராம் இல்லை. தமிழர் நாகரிகம் என்று சொல்ல மனம் இல்லை. எனவே பொதுவாக அது இந்திய நாகரிகம் என்றார். இராண்டாயிரம் ஆண்டுகட்டு முன்பு இந்தியா முழுவதும் தமிழ்தான் பேசப்பட்டது என்று அம்பேத்கார், ஜோதிபாசு ஆகியோர் கூறியுள்ளனர். தமிழகம்தான் தாயகம் என்பதை மறுக்கின்றனர். ஏன் என்றால் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்தவர்கள் தமிழர்கள் என்பதற்காக. அதற்கு சிலர் ஆதாரமாக மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து குஜராத் வழியாக தமிழகம் வந்தார்கள் என கூறுகின்றனர். ஆனால் ஹரப்பா நாகரிகத்தை ஆராய்ந்த ஒருவரான ஆர்.டி. பானர்ஜி (மேற்கு வங்க பேராசிரியர், மொகஞ்சதாரோ ஆய்வாளர்) திராவிடப் பண்பாடு தென் இந்தியாவின் தென்கோடியினின்று வடஇந்தியா முழுவதிலும் பரவிப் பலுச்சிசுத்தான் வழியாகப் பாரசீகம், ஈரான், பக்ரைந்தீவு முதலியவைகளிலெல்லாம் பரவி கீரிட்தீவு வரை பரவியுள்ளது. திராவிடப் பண்பாடு ஆதித்தநல்லூரில் அரும்பி, அரப்பா(Harappa) வரை அறுந்து போகாத சங்கிலித் தொடர்போல் திகழ்கிறது ஆதித்தநல்லூரில் அரும்பியது இரும்பு ஊழியில் கண்ட இரும்புப் பண்பாடு என்று உலகதிர மொழிந்தவர் ஆர்.டி. பானர்ஜி. இலெமூரியா கண்டத்தின் மருமம் - மூன்றுமாக் கடல்களின் புதிர் (The Riddles of Three Oceans) - அலெக்சாந்தர் கொந்தரத்தோவ் (A . Kondratove) கூறுகிறார் - தமிழர்கள் திராவிட இனத்தின் முன்னோடிகள். அவர்கள் மறைந்துபோன இலெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியான நாவலந்தீவில் தோன்றி, தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் பரவிய தொன்முதுக் குடிமக்கள் என்றும், இவர்கள் அயல் நாடுகளினின்று தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்றும், தமிழ்நாட்டில் தோன்றி எல், உபைதியா, எல்லாம், சுமேரியா நாடுகளில் குடியேறி, அங்குப் பயிர்த் தொழிலை வளர்த்துப் பல்வேறு கைத் தொழில்களைப் பெருக்கிச் சமயத்தையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் வளர்த்தவர்கள். தமிழ்மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான மொழி, தமிழர்கள் தென்னிந்தியாவில் தோன்றிய தொல்பழங்குடி மக்களாவர் தென்னிந்தியாவில் பழங்கல் ஊழியைச் சேர்ந்த மக்கள் நாகரீக வளர்ச்சி பெற்றுத் தெற்கினின்று வடக்கு நோக்கி வந்து மைய இந்தியா வர - ஏன்? கங்கை யமுனை வெளி - வடமேற்கு இந்தியா வரை சென்று இமய மலையின் அடிவாரத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் குடியேறியுள்ளனர். கி.மு.4000ஆம் ஆண்டில் திராவிடர்கள் பாரசீகம் (ஈரான்), ஈராக், எகிப்து, கிரீட், சைப்பிரசு நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேற்றம் பெற்றுள்ளார்கள் - அறிஞர் காளிதாசு நேக் (இந்தியாவும் பசிபிக் உலகமும்)
by முது,India    05-ஜன-2015 14:26:19 IST
இளைஞர்கள் பெருமளவில் முன்வர வேண்டும் என ஆய்வாளர் வெங்கடேசன் அவர்கள் கூறியுள்ளார். எனக்கு இது சார்ந்த துறையில் இயற்கையிலேயே ஆர்வம் மிகுதியாய் உள்ளது. தொடர்புக்கு எண்கள் தராதது வருத்தம் அளிக்கிறது. தயவுசெய்து உதவவும்.
by nijamudeen,India    04-ஜன-2015 20:58:13 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us