பனாரஸ் பல்கலையின் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

பனாரஸ் பல்கலையின் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

இக்கல்வி நிறுவனம் வழங்கும் MBBS, BDS, BAMS and BPharm போன்ற படிப்புகளுக்கு, நடத்தப்படும் நுழைவுத்தேர்வு இதுவாகும்.

இடங்களின் விபரம்

விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு மற்றும் OBC மாணவர்களுக்கு ரூ.1500ம், SC/ST பிரிவு மாணவர்களுக்கு ரூ.1000ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை, பரோடா வங்கிகளின் குறிப்பிட்ட கிளைகள், பனாரஸ் பல்கலையின் கிளை ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி

பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் கூட்டாக சேர்ந்து 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தகுதித்தேர்வை எழுதவுள்ள மாணவர்களும் இவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

பி.பார்ம் படிப்பு

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற வேண்டும்.(SC/ST பிரிவு மாணவர்களுக்கு 55% போதும்)

தேர்வுகள் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெறும்.

தேர்வு

MBBS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது, ஸ்கிரீனிங் மற்றும் மெயின் தேர்வு ஆகியவற்றின் மூலம் நடைபெறுகிறது. ஸ்கிரீனிங் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, மெயின் தேர்வுக்கு செல்ல முடியும்.

மற்றபடி, BDS, BPharm, BAMS போன்ற படிப்புகளுக்கு, ஸ்கிரீனிங் தேர்வுகள் மட்டுமே நடைபெறும். ஸ்கிரீனிங் தேர்வானது, ஆப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும். இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உயிரியல் ஆகிய பிரிவுகளிலிருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மெயின் தேர்வானது சப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு www.imsbhu.nic.in என்ற வலைத்தளம் செல்க.

Search this Site

மேலும்