மணிப்பால் யுஜிஇடி கர்நாடகா பல்கலை நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

மணிப்பால் யுஜிஇடி கர்நாடகா பல்கலை நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

கர்நாடகாவிலுள்ள மணிப்பால் பல்கலைக்கழகம், தனது MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான, தனி அகில இந்திய நுழைவுத்தேர்வை நடத்துகிறது. ஒரு பாடத்திற்கான நுழைவுத் தேர்வுக்கு தலா ரூ.1000, தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தகுதி

இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர், 17 வயதிற்கு குறைந்தவராக இருத்தல் கூடாது. பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில், கூட்டாக, 55% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுகள், பொதுவாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும்.

தேர்வு

2.5 மணி நேரங்கள் நடைபெறும் இந்த நுழைவுத்தேர்வில், மொத்தம் 250 multiple choice கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இயற்பியலில் 60 கேள்விகள், வேதியியலில் 60 கேள்விகள், உயிரியலில் 80 கேள்விகள், ஆங்கிலம் மற்றும் பொதுஅறிவுப் பகுதியிலிருந்து 40 கேள்விகளும் கேட்கப்படும்.

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 3 பிரிவுகளில் சேர்த்து 50% மதிப்பெண்களை, ஆன்லைன் நுழைவுத்தேர்வில் பெற்றால் மட்டுமே, சேர்க்கைபெற முடியும்.

கூடுதல் விபரங்களுக்கு www.manipal.edu என்ற இணையதளத்தை அணுகவும்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us