டாக்டர். டி.ஒய்.பட்டீல் பல்கலை நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

டாக்டர். டி.ஒய்.பட்டீல் பல்கலை நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

தனது எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு, மாணவர்களை சேர்க்க, AIET என்ற பெயரில் அகில இந்திய நுழைவுத்தேர்வை, டாக்டர். டி.ஒய்.பட்டீல் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது. மேற்கூறிய கல்லூரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மகாராஷ்டிர அரசின் அங்கீகாரம் பெற்றவை.

மருத்துவக் கல்லூரியானது, 150 MBBS இடங்களையும், பல் மருத்துவக் கல்லூரியானது, 100 BDS இடங்களையும் கொண்டுள்ளன. BDS படிப்பானது, இந்திய டென்டல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது.

விண்ணப்பக் கட்டணத்தின் விலை ரூ.500

தகுதி

பள்ளி மேல்நிலைப் படிப்பை, இயற்பியில், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் மொத்தமாக 50% மதிப்பெண்கள் எடுத்து தேறியிருக்க வேண்டும். SC/ST பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், கூட்டாக, 40% மதிப்பெண்கள் பெற்றால் போதும்.

பொதுவாக, மே மாதத்தில்தான் நுழைவுத்தேர்வு நடைபெறும்.

தேர்வுமுறை

ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு கேள்வித்தாள் இருக்கும். 3 மணி நேரங்கள் நடைபெறும் தேர்வில், ஆப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பதிலுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும் மற்றும் கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருக்கும்.

நுழைவுத்தேர்வில் 50% மதிப்பெண்கள் எடுத்து, பிற தகுதி நடைமுறைகளையும் பூர்த்திசெய்யும் மாணவர்கள், இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலதிக விபரங்களுக்கு www.dypatil.in என்ற இணையதளம் செல்க.

Search this Site