டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

பல்கலைக்கழக மானியக் குழுவானது, டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற பெயரில், இந்நிறுவனத்திற்கு நிகர்நிலைப் பல்கலை அந்தஸ்தை வழங்கியுள்ளது. நாக்(NAAC) அமைப்பால் B+ அங்கீகாரத்தை இக்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது.

இப்பல்கலையின் பல் மருத்துவப் படிப்பு துறையில் மாணவர் சேர்க்கைக்கென, தனி நுழைவுத் தேர்வினை நடத்துகிறது.

தகுதி
பள்ளி மேல்நிலைப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்கள் பெற்று தேறியிருக்க வேண்டும். இதைத்தவிர, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பிரிவுகளில் ஒன்றில், பி.எஸ்சி படிப்பை முடித்தவர்களும், இப்பல்கலை வழங்கும் பல் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

தேர்வு
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

மாணவர் சேர்க்கையானது, நுழைவுத்தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெறும்.

விபரங்களுக்கு www.drmgrdu.ac.in என்ற இணையதளம் செல்லவும்.

Search this Site

மேலும்