டத்தா மெகே மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

டத்தா மெகே மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

இக்கல்வி நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. இப்பல்கலையானது, MBBS படிப்பிற்கு, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியையும், BDS படிப்பிற்கு, சரத்பவார் பல் மருத்துவக் கல்லூரியையும் நடத்துகிறது. 150 MBBS இடங்களும், 100 பல் மருத்துவ இடங்களும் உள்ளன.

இப்பல்கலையானது, தான் வழங்கும் மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்காக DMIMS AIPMET என்ற பெயரில் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. மேலும், இப்பல்கலை NAAC அங்கீகாரமும் பெற்றுள்ளது.

தகுதி

பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50% மதிப்பெண்களைப் பெற்று தேறியிருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வானது, பொதுவாக, ஜுன் மாதத்தில் நடைபெறும்.

தேர்வு

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 3 பிரிவுகளில் தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இறுதி மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு www.dmimsu.edu.in என்ற இணையதளம் செல்க.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us