சிக்ஷான் ஓ அனுசாந்தன் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

சிக்ஷான் ஓ அனுசாந்தன் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

இக்கல்வி நிறுவனம் SAAT என்ற பெயரில், தேசியளவிலான நுழைவுத்தேர்வை, அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளுக்காக நடத்துகிறது. இப்பல்கலைக்கழகம், 9 விதமான பி.டெக் படிப்புகளை வழங்குகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.750.

தகுதி

மேற்கூறிய பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள், பள்ளி மேல்நிலைப் படிப்பில், கணிதம் மற்றும் இயற்பியலை கட்டாயப் பாடமாகக் கொண்டு, வேதியியல், கணினி அறிவியல், தகவல்தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, பயாலஜி, இன்பர்மேடிக்ஸ் மற்றும் புள்ளியியல் போன்ற துணைப்பாடங்களை, தேவைக்கேற்ப படித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். SC/ST/OBC பிரிவு மாணவர்கள் 40% மதிப்பெண்கள் பெற்றால் போதும்.

நுழைவுத்தேர்வு, மே மாதத்தில் நடைபெறும்.

தேர்வு

நுழைவுத்தேர்வானது(SAAT), ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகளைக் கொண்டிருக்கும். இத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அடுத்த நிலையாக, கவுன்சிலிங் செயல்பாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு http://soauniversity.ac.in/ என்ற இணையதளம் செல்க.

Search this Site