காமன்வெல்த் உதவித்தொகைகள் | Kalvimalar - News

காமன்வெல்த் உதவித்தொகைகள்நவம்பர் 16,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

பிரிட்டனில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்காக ‘காமன்வெல்த் மாஸ்டர்ஸ் ஸ்காலர்ஷிப்’ மற்றும் ‘காமன்வெல்த் பிஎச்.டி., ஸ்காலர்ஷிப்ஸ்’ ஆகிய இரு உதவித்தொகை திட்டங்களை காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் (சி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது!

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஐயர்லாந்து போன்றவற்றில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டம் அல்லது பிஎச்.டி., படிக்க விரும்பும், உரிய தகுதியுடைய இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்:
காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட பிரிட்டன் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். அந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை http://cscuk.dfid.gov.uk/apply/uk-universities/part-funding/ என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்.

இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். ஏற்கனவே வெளிநாட்டில் உயர்கல்வி, பயிற்சி அல்லது பிற உதவித்தொகையால் படித்தவர் என்றால், குறைந்தது 2 ஆண்டுகள் இடைவெளியின்றி இந்தியாவில் இருந்திருந்தால் மட்டுமே அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். முதுநிலை படிப்பிற்கு, துறை சார்ந்த பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை இந்தியாவின் மத்திய மனிதவள துறை அமைச்சகத்தின் வலைத்தளத்திலும், காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் வலைத்தளத்திலும் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் இந்த இரண்டு தளங்களிலும் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.

தேர்வு முறை:
மாணவர்கள் முந்தைய படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவீதம், விண்ணப்பித்துள்ள படிப்பு, பொருளாதார நிலை மற்றும் சேர்க்கை பெற்ற கல்வி நிறுவனம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு இருக்கும்.

விண்ணப்பிக்க வேண்டிய வலைத்தளங்கள்:
எம்.எச்.ஆர்.டி., - http://proposal.sakshat.ac.in/scholarship/

சி.எஸ்.சி., - https://fs29.formsite.com/m3nCYq/form62/form_login.html

விபரங்களுக்கு: http://mhrd.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us