பரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை கண்டுகொள்ளாத அரசு | Kalvimalar - News

பரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை கண்டுகொள்ளாத அரசுஅக்டோபர் 31,2014,10:39 IST

எழுத்தின் அளவு :

தேனி: வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும், மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதிநேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

நூலகத்துறையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. இத்துறையில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட நூலக அலுவலர் பணியிடம் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அதேபோல் 35க்கும் மேற்பட்ட முதல்நிலை ஆய்வாளர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

இதேபோல் நூலகர் பணியிடங்கள், பகுதிநேர நூலகர் பணியிடங்கள் என காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்கதையாகிறது. பணிபுரிபவர்களுக்கு மனிதநேய சலுகைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் 16 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கு எந்த பணிப்பலன்களும் வழங்கப்படவில்லை.

1800 பகுதிநேர நூலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை தினமும் 20 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் வேலை நாட்களில் மட்டும்தான் சம்பளம். மாதம் 10 நாட்கள் வரை விடுமுறை வந்து விடுகிறது.

எனவே, இவர்களது மாதச்சம்பளமே 400 ரூபாய்தான். அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. என்றாவது ஒருநாள் நமக்கும், அரசு ஊழியர்களை போல் சலுகைகளும், சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தவிக்கின்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

அங்கே படிக்க போறவங்களே ரொம்ப கம்மி. அதுக்கு எதுக்கு செலவு செய்து காசை வீணாக்கனுமின்னு அரசு நினைக்கிறது தவறில்லை. இது புரியாம வேலைப்பார்த்த நண்பரளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இப்போ இளைனர்களுக்கு புத்தகம் படிக்கிறது, செய்தித்தாள் படிக்கிறது, என்ற செயல்கள் ஒரு அவசியமற்ற ஒன்றாகிவிட்டது. ஒரு கைப்பேசியும், அதிலே இணையதள தொடர்பும் இருந்துவிட்டால் போதும். அத்துணையும் உள்ளங்கைகளில் சுருக்கமாக கிடைக்கிறது. அப்புறம் எதற்கு நூலகம், அதில் அலுவலர். இதற்கு பதில் அரசு திரைப்பட அரங்குகளையும், மதுபான கடைகளையும் மற்றும் பல வீண் பொழுதுபோக்கு வசதிகளையும் செய்து கொடுக்கலாம். அதுதான் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்ப்பார்ப்பு.
by சாமி,India    2014-11-01 09:14:28 09:14:28 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us