வெளிநாட்டு கல்விக்கான உதவித்தொகைகள் யாவை? | Kalvimalar - News

வெளிநாட்டு கல்விக்கான உதவித்தொகைகள் யாவை?செப்டம்பர் 17,2014,15:33 IST

எழுத்தின் அளவு :

கல்விக் கற்பதில் ஆகும் செலவினங்கள், தங்களின் கையை மீறிச் செல்லும்போது, மாணவர்களை காப்பாற்றும் ஒரு உபாயம்தான் உதவித்தொகை.

இன்றைய நிலையில், வெளிநாட்டு பல்கலைகளில், படிப்பதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெளிநாடுகளில் சென்று படித்தால், ஒருவரின் அறிவுக் கதவு அகல திறக்கப்படுவதுடன், திறன்களும் நன்றாக வளர்கிறது என்று நம்புகிறார்கள் மாணவர்கள்.

அதேசமயம், வெளிநாட்டுப் பல்கலைகளில், ஒருவர் படிக்க வேண்டுமெனில், அவர் தேர்வுசெய்யும் நாடு மற்றும் கல்லூரி ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 15 முதல் 30 லட்சங்கள் வரை செலவாகிறது.

எனவே, ஒருவர் தனது விருப்பத்தை தங்குதடையின்றி நிறைவேற்றிக்கொள்ள, உதவித்தொகைகளே(scholarships) சிறந்த படிக்கற்களாக அமைகின்றன. அதன்மூலமே, அவர்கள் தங்களின் பலவகையான கல்விச் செலவினங்களை பூர்த்திசெய்து சமாளிக்கிறார்கள்.

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, அரசுகள் வழங்கும் உதவித்தொகை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை அறிந்துகொள்வதன் மூலம், ஒரு மாணவர், தனக்கு தேவையான நேரத்தில், அவற்றுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

உதவித்தொகை விபரங்கள்

டாக்டர்.மன்மோகன்சிங் உதவித்தொகை
ஆக்ஸ்போர்டு அன்ட் கேம்ப்ரிட்ஜ் சொசைட்டி ஆப் இந்தியா உதவித்தொகை
யு.எஸ்.ஐ.இ.எப். புல்பிரைட் - நேரு உதவித்தொகை
சீன அரசாங்க உதவித்தொகை
ஆஸ்திரேலியாவின் சர்வதேச முதுநிலை ஆராய்ச்சி உதவித்தொகை
சீனாவில் படிப்பதற்கான ஹ¤வாய் மைத்ரீ உதவித்தொகை
இந்திய மற்றும் பிரெஞ்சு பிஎச்.டி. மாணவர்களுக்கான ராமன்-சார்பாக் உதவித்தொகை
கோமெல் பல்கலைக்கான டாடா உதவித்தொகை
யு.எஸ். யு.சி.டி. முதுநிலை உதவித்தொகை
ஆக்ஸ்போர்டு பல்கலையின் ரோட்ஸ் உதவித்தொகை
ஷெப்பீல்டு பல்கலையின் உதவித்தொகை
ஐரோப்பாவில் படிப்பதற்கான இந்தியா4இ.யு II உதவித்தொகை
காமன்வெல்த் உதவித்தொகை
இன்லேக்ஸ் உதவித்தொகை
பிரிட்டனில் படிப்பதற்கான ஹாம்பி உதவித்தொகை
மெல்போர்ன் - இந்தியா முதுநிலை உதவித்தொகை
செசக்ஸ் பல்கலை உதவித்தொகை

மேற்கண்ட உதவித்தொகைகள் பற்றி தெளிவாக அறிய வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட வலைதளங்களுக்கு சென்று, தகுதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறிந்து, அதன்பிறகு செயலாற்றவும்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us