தமிழக மாவட்டங்களில் விளையாட்டு அரங்கம் கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசு! | Kalvimalar - News

தமிழக மாவட்டங்களில் விளையாட்டு அரங்கம் கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசு!செப்டம்பர் 15,2014,15:33 IST

எழுத்தின் அளவு :

விருதுநகர்: தமிழகத்தில் சென்னை தவிர்த்து, பிற மாவட்டங்களில் மூன்று ஒன்றியங்களில், தலா 1.60 கோடி ரூபாயில் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

மத்திய அரசின் பைக்கா திட்டம், தற்போது ராஜிவ் கேல் அபியான் திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 634 மாவட்டங்களில் 6,545 ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஒன்றியங்களில் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் அமைக்க, ஒரு ஒன்றியத்திற்கு 1.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்க கூடுதலாக ரூ. 3 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளி விளையாட்டு அரங்கில் தடகளம், வில் வித்தை, இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, கோ-கோ, டென்னிஸ், கையுந்து பந்து மைதானங்கள் அமைக்க வேண்டும். உள் விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை, ரெஸ்ட்லிங், மேஜைபந்து, பளு துாக்குதல், மல்டி ஜிம் அமைக்க வேண்டும்.

இந்த அரங்கங்களை பராமரிக்க மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றும் மூன்று உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிராமப்புற வீரர்களை ஊக்கப்படுத்த ரூ. 1.60 கோடியில் உள், வெளி விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் பல்வேறு விளையாட்டு போட்டியில் புதிய வீரர்களை உருவாக்கலாம்" என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

எல்லாம் நல்லாத்தான் இருக்கு இந்த அரசியல்வாதிகள் உள்ள வந்து குட்டய கொழப்பமா இருந்த சரிதான் கிராமப்புற மாணவர்கள் பயிற்சி பெற மிக உறுதுணையாக இருக்கும் மத்தியஅரசு நலத்திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடைய வேண்டும்
by தமிழ்செல்வன் ,Qatar    2014-09-15 12:48:44 12:48:44 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us