ஐ.ஐ.டி.,கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட பிரதமர் மோடி அழைப்பு! | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட பிரதமர் மோடி அழைப்பு!ஆகஸ்ட் 28,2014,14:14 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணத் துறைகளில், இந்தியா, வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்க்க, ஐ.ஐ.டி.,கள் தமது பங்கினை செலுத்த வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.ஐ.டி. இயக்குநர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு முக்கிய கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: இந்திய ரயில்வே துறையில், பயன்படுத்துவதற்கு இலகுவான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதோடு, "அனைவருக்கும் வீடு" என்ற இலக்கை அடையும் வகையில் அக்கல்வி நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும். அதன்பொருட்டு, செலவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற மற்றும் நல்ல வலுவான கட்டுமானமும் கொண்ட வீடுகளை கட்டும் வகையில், தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.

ஐ.ஐ.டி.,களில் படிக்கும் மாணவர்களின் மனதில், சமூகத்திற்கு சேவையாற்றும் எண்ணத்தை ஊன்ற வேண்டும்.

தற்போது, ரூபாய் தாள்களுக்கான மை மற்றும் கண்ணீர் புகை போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை, இரண்டும் மிக முக்கியமானவை. இத்தகையப் பொருட்களை உருவாக்கும் திறமை இந்தியாவில் இல்லை என்று சொல்லப்படுவதை நான் நம்புவதற்கு தயாராக இல்லை.

சாதாரண பொதுமக்களுக்கு, அவர்களின் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு, புத்தாக்க தீர்வுகளை வழங்கும் வகையிலான புராஜெக்ட்டுகளை ஐ.ஐ.டி.,கள் மேற்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில், ஒரு நேர்மறை மாற்றத்தை அக்கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.

அறிவியல் என்பது சர்வதேச தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், தொழில்நுட்பம் என்பது உள்ளூர் தேவைக்கு ஏற்றதாக இருப்பது முக்கியம்.

ஐ.ஐ.டி.,கள் தங்கள் அருகாமையிலுள்ள பொறியியல் கல்லூரிகளை தத்தெடுத்துக் கொண்டு, புத்தாக்க விஷயங்களில், அவற்றுக்கு சிறந்த ஆலோசகராக செயல்பட்டு, ஊக்குவிக்க வேண்டும்.

மேலும், அந்தக் கல்வி நிறுவனங்கள், தங்களின் பழைய மாணவர்களை, தற்போதைய மாணவர்களுடன் உரையாடச் செய்து, அதன்மூலம் அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளச் செய்ய வேண்டும்.

உலகளாவிய கல்வி நிறுவன தரவரிசை முக்கியமானது என்றாலும், நமக்கான சொந்த மதிப்பீட்டு நிலைகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த மதிப்பீடுதான், மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு உள்ளார்ந்த செயல்முறையாக திகழும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து

It is really very apt advice from the PM. Old IITs should offer only PG Programmes and Research Studies.UG courses must be left with other Engg Institutions. Then IITs can concentrate on the PM advice and make more useful to the soceity by stopping the brain-drain process.
by M Rajagopal,India    2014-08-28 13:28:09 13:28:09 IST
சூப்பர் மோடி ஜி
by நாகேந்திரன்,India    2014-08-28 11:53:36 11:53:36 IST
sure everything will happen. Yesterday thought, Todays talk, Tomorrow will come in true. Vazhgha Vaiyagam Vazhgha India.
by Vidial,Singapore    2014-08-28 08:16:32 08:16:32 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us