தேசிய நல்லாசிரியர் விருதுபெறும் தமிழக ஆசிரியர்கள் யார்? | Kalvimalar - News

தேசிய நல்லாசிரியர் விருதுபெறும் தமிழக ஆசிரியர்கள் யார்?ஆகஸ்ட் 21,2014,10:42 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.

சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கின்றன.

ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.

விருதில், ரொக்கம் 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்:

1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.
5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.
7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.
8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.
9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.
10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.
11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.
13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.
14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.
17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.
20. செல்வசேகரன், முதுகலை ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.
21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.
22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.

மாணவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டும்

மாணவர்கள், நம் பிள்ளைகள் என்ற உணர்வுடன், அவர்களின் எதிர்காலத்திற்காக, ஆசிரியர், தங்களை தியாகம் செய்ய வேண்டும் என, தேசிய விருது பெற்ற சென்னை ஆசிரியர், ஆதியப்பன் தெரிவித்தார்.

சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள எம்.எப்.எஸ்.டி., அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆதியப்பன், சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது பெற்றது குறித்து ஆதியப்பன், 58, கூறியதாவது: கடந்த, 35 ஆண்டுகளாக, மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, அயராமல் உழைத்து வருகிறேன். என் பள்ளி தான் எனக்கு வீடு. காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு வந்தால், இரவு 8:00 மணி வரை பள்ளியில்தான் இருப்பேன்.

நான், பணியில் சேர்ந்தபோது, மொத்த மாணவர் 300 பேர் தான் இருந்தனர். தற்போது 800 பேர் உள்ளனர். பள்ளியில், வணிகவியல் பாடப்பிரிவு முக்கியமானதாக இருந்தது. தற்போது, மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கும் மாணவர்களை தயார்படுத்துகிறோம்.

முன்னாள் மாணவர்கள் பலரை, டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் உருவாக்கி உள்ளோம். திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றும் நடராஜன் என் மாணவர்.

தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியும், பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம், 99 சதவீதம் என்ற அளவிலும், பள்ளி தேர்ச்சி பெற்றுள்ளது. 35 ஆண்டுகளாக, என் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சியை அளித்து வருகிறேன்.

என் 35 ஆண்டுகால ஆசிரியர் பணியின் முழு விவரங்களையும் ஆராய்ந்தபின், என்னை விருதுக்காக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
ஆசிரியர் பணிக்கு வரும் இளைஞர்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளாக நினைத்து அவர்களின் முன்னேற்றத்திற்காக, தங்களை முழுமையாக தியாகம் செய்ய வேண்டும்.

ஆசிரியர் பணியின் பொறுப்பை, முழுமையாக உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட்டால் விருதுகள் தானாக நம்மை தேடி வரும். இவ்வாறு ஆதியப்பன் தெரிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us