15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியீடு! | Kalvimalar - News

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியீடு!ஆகஸ்ட் 01,2014,09:44 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளி கல்வி துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), ஆகஸ்ட் 1ம் தேதி (இன்று) இணையதளத்தில் வெளியிடுகிறது.

ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரில் இருந்து 10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று, கூடுதலாக 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என 15,226 பேர் அடங்கிய இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது.

முதலில் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை

தமிழ் - 772
ஆங்கிலம் - 2,822
கணிதம் - 911
இயற்பியல் - 605
வேதியியல் - 605
தாவரவியல் - 260
விலங்கியல் - 260
வரலாறு - 3,592
புவியியல் - 899
மொத்தம் - 10,726

Advertisement

வாசகர் கருத்து

waiting for list
by kannan,India    2014-08-01 17:02:04 17:02:04 IST
ரிசல்ட் எப்போ வரும்?
by john,India    2014-08-01 15:33:03 15:33:03 IST
வேலை உறுதியாக கிடைக்குமா? அப்படி என்றால் கூடுதலாக 500 ஆசிரியர்கள் முதன்மை பாடம் என்ன? தயவு செய்து கூறுங்கள் மற்றும் கேளுங்கள் . நன்றி ...
by அரிராமன் S,India    2014-08-01 11:40:42 11:40:42 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us