மெக்கானிக்கல் தேர்வு செய்தவர்கள் 18,334 பேர் - பெண்களிடம் விழிப்புணர்வு இல்லை | Kalvimalar - News

மெக்கானிக்கல் தேர்வு செய்தவர்கள் 18,334 பேர் - பெண்களிடம் விழிப்புணர்வு இல்லைஜூலை 28,2014,12:23 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கி, 21 நாட்கள் முடிந்துவிட்டன. தற்போதைய நிலவரத்தின்படி, மெக்கானிக்கல் பிரிவைத்தான் அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மொத்தம் 18,334 பேர் அப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.

அவர்களில், 18,008 பேர் ஆண்கள். வெறும் 326 பேர் மட்டுமே பெண்கள். மெக்கானிக்கல் படிப்பை பெண்கள் மேற்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை மற்றும் அதில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்ற விழிப்புணர்வு, பல கல்வியாளர்களால் வழங்கப்பட்டும், ஏனோ, அத்துறையை நோக்கி போதுமான பெண்கள் இன்னும் வரவில்லை.

ஆனால், இதற்கு நேர்மாறான நிலைமை, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ளது. இப்பிரிவை, மொத்தம் 15,133 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல் பிரிவுக்கு அடுத்து இதுவே அதிகம். இதில், 4,136 பேர் மட்டுமே ஆண்கள். ஆனால், பெண்களின் எண்ணிக்கையோ 10,997 பேர்.

மூன்றாவதாக சிவில் பிரிவை, 11,557 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். ஆண்களின் கணக்கு 7,205 பேர் மற்றும் பெண்களின் கணக்கு 4,352 பேர்.

மெக்கானிக்கல் தமிழ்வழிப் பிரிவை 136 பேரும், தமிழ்வழி சிவில் பிரிவை 168 பேரும் தேர்வு செய்துள்ளனர். குறைந்தளவாக ஏரோநாட்டிகல் பிரிவை 802 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து

எல்லாம் அவுங்க விருப்பம் இதல்லாம் பெரிய விஷயமே இல்லப்பா
by vivek,India    2014-07-29 10:09:16 10:09:16 IST
எத்தனை பேர் வேண்டுமானாலும் எடுங்க. ஆனா வருடத்துக்கு 3000 பேருக்கு வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம். இங்க, டி.வி.யில உட்கார்ந்துகிட்டு இங்க வாய்ப்பு இருக்கு, அங்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனால் உண்மையிலேயே நடக்குறது வேற. பாதி பேருக்கு மேல் வேறு துறைக்குத்தான் செல்கின்றனர். இதுதான் உண்மை. by Er . Kavin . Anna university aal padhikapatavargalil oruvan
by கவின்,India    2014-07-29 07:29:36 07:29:36 IST
இவை எதற்கும் இன்னும் நான்கு வருடம் கழித்து வேலை கிடைக்காது. தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணினி போன்ற குறைந்த மாணவர்கள் தேர்வு செய்யும் துறைகளுக்கே பின்னாளில் வாய்ப்புகள் பெருகும்.
by வெங்கட்,India    2014-07-28 15:50:05 15:50:05 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us