கேம்ப்ரிட்ஜ் இங்கிலிஷ் தேர்வு | Kalvimalar - News

கேம்ப்ரிட்ஜ் இங்கிலிஷ் தேர்வுமார்ச் 10,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச புகழ் பெற்ற, இங்கிலாந்தின், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரத்யேக ஆங்கில திறன் பரிசோதனை அமைப்பு, ‘கேம்பிரிட்ஜ் அசெஸ்மென்ட் இங்கிலிஷ்’!

தங்களது ஆங்கில அறிவை, சுயபரிசோதனை செய்துகொள்வதற்காக மட்டுமின்றி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காகவும், சர்வதேச பணி வாய்ப்பிற்காகவும், விசா பெறுவதற்காகவும், குடிமாறுதல்களுக்காகவும், ஆங்கில மொழியை கற்பிக்கும் ஆசிரியர் தகுதிக்காக்கவும், ‘கேம்ப்ரிட்ஜ் அசெஸ்மென்ட் இங்கிலிஷ்’ தேர்வை, லட்சணக்கானோர் எழுதுகின்றனர்.

அங்கீகரிக்கும் நிறுவனங்கள்
உலகம் முழுவதிலும், 130 நாடுகளில், 12 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்கள், 6 ஆயிரம் தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்கள் இத்தேர்வை அங்கீகரிக்கின்றன.

குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,  மான்செஸ்டர் பல்கலைக்கழகம், எடின்பர்க் பல்கலைக்கழகம், கிங்க்ஸ் காலெஜ் லண்டன், மிச்சிகன் பல்கலைக்கழகம், டொரண்டோ பல்கலைக்கழகம், சார்ட்டர்ட் அக்கவுண்ட்ஸ் ஆஸ்திரேலியா, ஆக்லாந்து பல்கலைக்கழகம், ஒடாகோ பல்கலைக்கழகம், உள்ளிட்ட பல பிரபலமான கல்வி நிறுவனங்கள் இத்தேர்வை அங்கீகரிக்கின்றன.

பி.எம்.டபள்யு., டிஸ்னி, ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட், ஜெனரல் மோட்டார்ஸ், சிட்டி வங்கி, கோககோலா, நோக்கியா, செல், எச்.சி.எல்., வோடாபோன், யு.பி.எஸ்., ராய்ட்டர்ஸ், கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ், ஹிடாச்சி, எச்.பி., நொவார்டிஸ், கேட்பர்ரி, எச்.எஸ்.பி.சி., எமிரெட்ஸ் ஏர்லைன்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான பிரபல நிறுவனங்களும் இத்தேர்வை அங்கீகரிக்கின்றன.

நிலைகள்
கேம்ப்ரிட்ஜ் இங்கிலிஷ்- புரொபீசியன்சி, அட்வான்ஸ்ட், பிரிலிமினரி, பிசினஸ் ஹயர், பிசினஸ் வான்டேஜ், பிசினஸ் பிரிலிமினரி, ஐ.இ.எல்.டி.எஸ்., ஐ.எல்.இ.சி., ஐ.சி.எப்.இ., டி.கே.டி., சி.இ.எல்.டி.ஏ., டெல்டா உள்ளிட்ட பல்வேறு தேர்வு நிலைகள் உள்ளன. இவற்றில், தேவையையும், தகுதியையும் பொறுத்து நிலைகளை தெரிவு செய்துகொள்ளலாம்.

தகுதி
7 வயது முதல் ‘கேம்ப்ரிட்ஜ் இங்கிலிஷ் அசெஸ்மென்ட்’ தேர்வை எழுத முடியும்.

தேர்வு முறை
எழுத்து மற்றும் கணினி என இரண்டு முறைகளில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் உள்ளன.

விபரங்களுக்கு: http://www.cambridgeenglish.org/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us