ஆக்ஸ்போர்டு பல்கலையில் அட்மிஷன் பெறுவது எப்படி? | Kalvimalar - News

ஆக்ஸ்போர்டு பல்கலையில் அட்மிஷன் பெறுவது எப்படி?பிப்ரவரி 14,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

உலகின் மிகப் பழமையான கல்வி நிறுவனமான, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும்! அத்தகைய மாணவர்கள் முதலில், பல்கலைக் கழகத்தின் சேர்க்கை முறைகளை அறிந்துகொள்வது அவசியம்.  

அறிமுகம்: கடந்த 1096ம் ஆண்டு மிகச் சாதாரண கல்விக் கூடமாக நிறுவப்பட்ட, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தற்போது, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பயின்று வருகின்றனர். உலகின் தலைசிறந்த 10 கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று!

துறை சார்ந்த தேர்வுகள்
ஒவ்வொரு துறை சார்ந்த படிப்பிற்கும் ஒரு பிரத்யேக தேர்வின் மூலம், மாணவர்களின் திறன் பரிசோதிக்கப்படுகிறது. அதனடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

உயர் மருத்துவ அறிவியல் படிப்புகள்- பி.மேட்.,
வேதியியல், பொருளாதாரம், புவியியல் துறை சார்ந்த படிப்புகள் - டி.எஸ்.ஏ.,
கிளாசிக் படிப்புகள் - சி.ஏ.டி.,
ஆங்கில துறை சார்ந்த படிப்புகள் - இ.எல்.ஏ.டி.,
நவீன மொழிகள் துறை சார்ந்த படிப்புகள்- எம்.எல்.ஏ.டி.,
கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் துறை சார்ந்த படிப்புகள் - எம்.ஏ.டி.,
பொறியியல் துறை சார்ந்த படிப்புகள் - பி.ஏ.டி.,
ஓரியண்டல் படிப்புகள் - ஓ.எல்.ஏ.டி.,
வரலாற்றுத் துறை சார்ந்த படிப்புகள் - எச்.ஏ.டி.,
சட்டப் படிப்புகள் - எல்.என்.ஏ.டி.,

இரண்டு தேர்வுகள்
கிளாசிக் மற்றும் மார்டன் லேங்குவேஜ் படிப்புகள் -  சி.ஏ.டி., மற்றும் எம்.எல்.ஏ.டி., 
ஆங்கிலம் மற்றும் நவீன மொழிகள் - எம்.எல்.ஏ.டி., மற்றும் இ.எல்.ஏ.டி., 
ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு மொழிகள்  - எம்.எல்.ஏ.டி., மற்றும்  ஓ.எல்.ஏ.டி., 
வரலாறு மற்றும் பொருளாதார படிப்புகள்  - எச்.ஏ.டி., மற்றும் டி.எஸ்.ஏ.,
உளவியல், தத்துவம் மற்றும் மொழியியல் ஆகிய படிப்புகள் - டி.எஸ்.ஏ., மற்றும்  எம்.எல்.ஏ.டி.,

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இரண்டு தேர்வுகளுக்கும் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற, தகுதி தேர்வுகள் இல்லாத பிற பட்டப்படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நேர்முகத் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

கல்வித் தகுதிகள்: இந்திய மாணவர்களைப் பொருத்தவரை, சி.பி.எஸ்.இ., அல்லது மாநில கல்விப் பாடத்திட்டத்தில் பயின்று, 12ம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ‘டோபல்’ / ‘ஐ.இ.எல்.டி.எஸ்.,’ / கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி புலமைத்தேர்வு போன்ற ஏதேனும் ஒன்றில் சிறந்த மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். அறிவியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும். இவை தவிர, மேற்குறிப்பிட்டவாறு துறை சார்ந்த தேர்வையும் எழுத வேண்டும்.

விபரங்களுக்கு: www.ox.ac.uk

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us