‘டோபல்’ | Kalvimalar - News

‘டோபல்’ ஜனவரி 12,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆங்கிலத் திறனை மதிப்பிடுவதற்கான மொழிப் புலமை தேர்வுகளில் முக்கியமான ஒன்று, ‘டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் ஏஸ் ஏ பாரின் லேங்குவேஜ்’ எனும் ‘டோபல்’! உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் மட்டுமல்லாமல், பலதரப்பட்ட மக்களும், அவர்களது, ஆங்கில மொழி திறமையை நிரூபிக்க ‘டோபல்’ தேர்வினைத் எழுதுகின்றனர்!

முக்கியத்துவம்
பொதுவாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற சர்வதேச நாடுகளில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள வெளிநாட்டு மாணவர் சேர்க்கை இடங்கள், ‘டோபல்’ மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி, பணி வாய்ப்பு, விசா உட்பட பல்வேறு காரணங்களுக்கும் ‘டோபல்’ மதிப்பெண் முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்வு எழுதும் முறை
‘டோபல்’ தேர்வானது டோபல் இன்டர்நெட் பேஸ்டு டெஸ்ட் (ஐ.பி.டி.,) மற்றும் டோபல் பேப்பர் டெலிவர்டு டெஸ்ட் (பி.டி.டி.,) என இரு தேர்வு முறைகளைக் கொண்டது. தேர்வர்களின் அமைவிடத்திற்கு ஏற்ப, தாள் வழி தேர்வா? அல்லது இணைய வழி தேர்வா? என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

டோபல் ஐ.பி.டி.,
வாசித்தல், கேட்டல், பேசுதல் மற்றும் எழுதுதல் உள்ளிட்ட  பகுதிகளில், ஒருங்கிணைந்த ஆங்கில மொழி திறன்களை ஆராயும் விதத்தில், டோபல் ஐ.பி.டி., தேர்வு வடிவமைக்கப்படுகிறது. உலகம் முழுவதும், டோபல் இணையதளம் மூலம் டோபல் - ஐ.பி.டி., தேர்வு நிர்வகிக்கப்படுகிறது. ‘மல்டிபில் சாய்ஸ்’ அடிப்படையில், வாசித்தல் பகுதியில் 36-56 கேள்விகள், கேட்டல் பகுதியில் 34-51 கேள்விகள், பேசுதல் பகுதியில் 6 செயல் பயிற்சிகள் மற்றும் எழுதுதல் பகுதியில்  2 செயல் பயிற்சிகள் என மொத்தம் 4 மணி 30 நிமிடங்கள் வரை இத்தேர்வு நடைபெறும்.

டோபல் பி.பி.டி., 
டோபல் பேப்பர் டெலிவர்ட் டெஸ்ட் என்பது, பேப்பர் பேஸ்டு டெஸ்ட் தேர்வுக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்ட புதியதேர்வு முறை. ஆங்கில மொழியை வாசித்தல், கேட்டல் மற்றும் எழுதுதல் போன்ற பகுதிகளில், மொழித் திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது. 2 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வு ’மல்டிபில் சாய்ஸ்’ அடிப்படையில், வாசித்தல் பகுதியில் 42 கேள்விகள், கேட்டல் பகுதியில் 34 கேள்விகள் மற்றும் எழுதுதல் பகுதியில்  2 செயல் பயிற்சி கேள்விகள் கேட்கப்படும்.

ஆண்டுக்கு 50 முறைக்கு மேல் நடைபெறும் இத்தேர்வினை, எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். டோபல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

தகுதி: இத்தேர்வுவை யார் வேண்டுமானாலும் எழுதலாம்.

விபரங்களுக்கு: www.ets.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us