பிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எனது மகன் தேர்வுகளுக்காக நன்றாக தயாராகவில்லை. அவனை இன்ஜினியரிங் கல்லூரி எதிலும் படிக்க வைக்க முடியாதோ என கவலையுறுகிறேன். ஆலோசனை தரவும். | Kalvimalar - News

பிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எனது மகன் தேர்வுகளுக்காக நன்றாக தயாராகவில்லை. அவனை இன்ஜினியரிங் கல்லூரி எதிலும் படிக்க வைக்க முடியாதோ என கவலையுறுகிறேன். ஆலோசனை தரவும். ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

+2 படிப்பவர்களின் பெற்றோரில் பெரும்பாலானோர் தங்களது மகனையோ மகளையோ இன்ஜினியரிங்கிற்கு அனுப்ப வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இத்தனை பேரும் இன்ஜினியரிங் சென்றால் பிற துறைகளுக்கு யார் தான் செல்வது? பிற துறைகளில் வேலை வாய்ப்பே கிடையாதா? .டி., துறையின் அசுர வளர்ச்சியால் நமது பெற்றோர் அனைவருமே பணத்தை அடிப்படையாக வைத்தே தங்கள் பிள்ளைகளின் துறையை தீர்மானிக்கிறார்கள். .டி., துறையை விட பிற துறைகள் வளரும் போது அங்கே யார் தான் செல்ல முடியும்? எனவே தேவையில்லாமல் கவலைப்படாமல் இப்போதைக்கு உங்கள் மகன் மீதமுள்ள பாடத் தேர்வுகளை நன்றாக எழுத அவருக்கு உற்சாகம் ஊட்டுங்கள். மதிப்பெண்கள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இன்று தான் எத்தனை விதமான படிப்புகள்? எத்தனை விதமான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன? எனவே உங்கள் மகனின் அடிப்படைத் திறன்களுக்கேற்ற துறையை தீர்மானிப்பது முடியாததல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us