எழுதுங்கள் ஜி.மேட்., | Kalvimalar - News

எழுதுங்கள் ஜி.மேட்.,டிசம்பர் 15,2017,00:00 IST

எழுத்தின் அளவு :

தங்களது மேலாண்மை கல்வியை, சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் தொடர விரும்பும் மாணவர்கள், கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு ஜி.மேட்., எனும் ‘கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்’!

உலகளவில் நடத்தப்படும் ஜி.மேட்., தேர்வு, கணினி வழி தரநிர்ணய சோதனைத் தேர்வாகும். மாணவர்களது, ஆங்கில மொழித் திறன் மற்றும் கணிதத் திறன் போன்றவை சோதிக்கப்படுகிறது. இத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பெரும்பாலான சர்வதேச வணிகக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்: கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில் (ஜி.எம்.ஏ.சி.,) மூலம் நடத்தப்படும் ஜி.மேட் தேர்வுக்கு, எவ்வித வயது வரம்போ, சிறப்புத் தகுதிகளோ தேவை இல்லை. இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு பகுதிகள்: அனலடிக்கல் ரைட்டிங், இன்டர்கிரேட் ரீசனிங், குவான்டிடேடிவ் மற்றும் வெர்பல் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும் ஜி.மேட் தேர்வில், 800 மதிப்பெண்கள் வரை மாணவர்கள் எடுக்க முடியும். 710 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் தான் சிறந்த வணிகக் கல்லூரிகளில் சேர்க்கை பெற முடியும்.

ஜி.மேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இந்தியாவில் 25 மாநிலங்களில், ஜி.மேட் தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் இத்தேர்வுக்கான மையங்கள் உள்ளன.

விபரங்களுக்கு: www.mba.com

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us