ராகிங் தடுப்பு - யு.ஜி.சி., அதிரடி நடவடிக்கை | Kalvimalar - News

ராகிங் தடுப்பு - யு.ஜி.சி., அதிரடி நடவடிக்கைஏப்ரல் 25,2014,09:59 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: உயர்கல்வி நிறுவனங்களில் "ராகிங்" கொடுமையைத் தடுக்க, கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கி அவற்றின் பணிகளை உறுதிசெய்ய வேண்டும்; பஸ் நிறுத்தங்களையும் கண்காணிக்க வேண்டும்" என பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் புதிய மாணவர் சேர்க்கை நடக்கும்போது, ராகிங் கொடுமை நிகழ்வது சில ஆண்டுகள் முன் வரை சகஜமான ஒன்று. கடந்த ஆண்டு இந்த கொடுமையைத் தடுக்க, யு.ஜி.சி. பல நடவடிக்கைகளை எடுத்தது.

நடப்பு ஆண்டுக்கான யு.ஜி.சி.யின் அறிவிப்பு: பல்கலை, கல்லூரி, கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க, முற்றிலுமாக நீக்க, புதிய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து கல்வி நிறுவனங்களும், ராகிங் தடுப்பு குழு, ராகிங் தடுப்பு படை, உடனடி உதவி திட்டம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

கல்வி நிறுவனத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், எச்சரிக்கை மணி, மாணவர்களுடன் தொடர் கலந்துரையாடல் மற்றும் கவுன்சிலிங், பிரச்னைக்கு உரியவர்களை கண்டறிதல், கல்வி நிறுவனத்தின் அறிக்கை மற்றும் வெளியீடுகளில் ராகிங் தடுப்பு குறித்த உறுதி அளித்தல் வேண்டும்.

மேலும் கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகள், மாணவர்கள் தங்குமிடங்கள், உணவகம், கேளிக்கை மையங்கள், கழிப்பறைகள் மற்றும் மாணவர்கள் தினந்தோறும் செல்லும் பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் திடீர் சோதனை மூலம் ராகிங் மற்றும் பிற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர், ராகிங் தடுப்பு பிரிவு மற்றும் அவசர உதவி எண், கண்காணிப்பு பிரிவு, இணையதளம் ஆகியவற்றை அறிந்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. வகுத்துள்ள நடைமுறைப்படி அமல்படுத்த வேண்டும். "ராகிங்&' நடக்கும் பட்சத்தில் 1800 180 5522 மற்றும் www.anntiragging.in என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us