மின்னணு கழிவுகளை அகற்றும் பணியில் 4.5 லட்சம் குழந்தைகள் | Kalvimalar - News

மின்னணு கழிவுகளை அகற்றும் பணியில் 4.5 லட்சம் குழந்தைகள்ஏப்ரல் 23,2014,10:27 IST

எழுத்தின் அளவு :

லக்னோ: நாடு முழுதும் இ-கழிவுகளை அகற்றும் பணியி்ல் 4.5 லட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட புவிதினத்தை முன்னிட்டு அசோசெம் அமைப்பின் கூட்டத்தில், அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ் ராவத் கூறியதாவது:

நாடு முழுவதும் இ-கழிவு எனப்படும் எலக்ட்ரானிக்கழிவு பொருட்களை அழிக்கும் பணியில் 4.5 லட்சம் இந்திய குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர். சுமார்10-14 வயதுடைய குழந்தைகள் இத் தொழிலில் ஈடுபட்டு்ள்ளனர். நாடு முழுவதும் ஆண்டு ஒன்றிற்கு 15 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு இ-கழிவுகள் உருவாக்கப் படுகி்ன்றன. நாட்டில் மிக அதிக அளவாக மும்பையில் 96 ஆயிரம் மெட்ரிக்டன் அளவிற்கு இ-கழிவுகள் உருவாக்கப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக டில்லி, பெங்களூரு சென்னை, கோல்கட்டா, அகமதாபாத், ஐதராபாத், புனே போன்ற நகரங்கள் இடம் பெறுகி்னறன.

இ-கழிவுகளில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பொருட்கள் 68 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து தொலை தொடர்பு துறை 12 சதவீதம் எலக்ட்ரி்கல்துறை 8 சதவீதம், மருத்துவத்துறை 7, வீட்டு உபயோகப்பொருட்கள் 5 சதவீத அளவிற்கு இடம் பிடித்துள்ளது.

மேலும் இ-கழிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு வேதிப்பொருட்களை கையாள்வதால் அவர்களுக்கு பலவித நோய்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us