90% தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தரமானதல்ல! | Kalvimalar - News

90% தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தரமானதல்ல!

எழுத்தின் அளவு :

நாட்டின் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், தேவைக்கும் அதிகமான அளவில், தொழில்நுட்ப பட்டதாரிகளை உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(AICTE) எடுத்த ஆய்வின்படி, ஏறத்தாழ 90% தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், விதிமுறைகளின்படி இயங்குவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

AICTE, சுமார் 400 கல்லூரிகளில் திடீர் ஆய்வை மேற்கொண்டது. அதில், 350 கல்லூரிகள் வரை, அடிப்படை விதிமுறைகளைக் கூட நிறைவு செய்திருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. மாணவர்கள் இல்லாமல் ஈயாடுவதால், அதிகளவிலான பொறியியல் கல்லூரிகள், மூடுவிழா நடத்தும்பொருட்டு, AICTE க்கு விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளன.

விதிமுறைகளை நிறைவுசெய்யாத கல்வி நிறுவனங்களுக்கு, AICTE சார்பில், குறைபாடுகளை சரிசெய்யுமாறு அறிவுறுத்தியும், எச்சரித்தும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால், அடுத்த கல்வியாண்டுக்கான அனுமதி ரத்துசெய்யப்படும். அந்த கல்வி நிலையங்களில் படித்துவரும் மாணவர்கள், வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்படுவார்கள்.

AICTE -ன் ஆன்லைன் அங்கீகார செயல்பாட்டில், இதுவரை, 25 மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. E-governance முறையின் மூலம், அங்கீகாரமளிக்கும் செயல்பாட்டை, AICTE எளிதாக்கியுள்ளது. E-governance மூலம், வெளிப்படைத் தன்மை, அணுகுதல் மற்றும் விரைவான செயல்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலுள்ள 15,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை எளிதாக நிர்வகிக்கலாம்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us