கல்வியில் நாம் எங்கே? | Kalvimalar - News

கல்வியில் நாம் எங்கே?

எழுத்தின் அளவு :

உலக நாடுகளில், எது சிறந்த கல்வி அமைப்பை கொண்டுள்ளது என்ற கருத்துக்கணிப்பை, இங்கிலாந்தில் உள்ள பியர்சன் கல்வி நிறுவனம் நடத்தியது.

முதல் 20 நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடமும், தென் கொரியா இரண்டாமிடமும் பெற்றுள்ளன. இக்கருத்துக் கணிப்பு, 2006 முதல் 2010 வரை, சர்வேதச அளவில் ஒவ்வொரு நாடும், பெற்ற கல்வியின் தரம், அமைப்பு, முறை, பட்டதாரிகளின் சதவீதம் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பியர்சன் நிறுவனத்தின் தலைமை கல்வி அலோசகர், மைக்கேல் பார்பர் கூறும்போது, கல்வி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளில், ஆசிரியர்கள் உயர்வாக மதிக்கப்படுகின்றனர். அங்கு கலாசாரம், ஒழுக்கம் சிறந்து காணப்படுகிறது என்றார்.

பட்டியலில் இடம் பெற்ற டாப் 20 நாடுகள்

1. பின்லாந்து
2. தென் கொரியா
3. ஹாங்காங்
4. ஜப்பான்
5. சிங்கப்பூர்
6. இங்கிலாந்து
7. நெதர்லாந்து
8. நியூசிலாந்து
9. சுவிட்சர்லாந்து
10. கனடா
11. அயர்லாந்து
12. டென்மார்க்
13. அஸ்திரேலியா
14.போலந்து
15. ஜெர்மனி
16. பெல்ஜியம்
17. அமெரிக்கா
18. ஹங்கேரி
19. ஸ்லோவாக்கியா
20. ரஷ்யா

(இப்பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை)

Search this Site