மொழித்திறன் இன்மையால் பரிதவிக்கும் பட்டதாரிகள் | Kalvimalar - News

மொழித்திறன் இன்மையால் பரிதவிக்கும் பட்டதாரிகள்

எழுத்தின் அளவு :

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய சர்வேயின்படி, இந்தியாவில், சுமார் 50% பொறியாளர்கள் வரை போதுமான ஆங்கில அறிவில்லாமல் இருக்கிறார்களாம். இதனால், அவர்கள் தங்களுக்கான பொருத்தமான பணி வாய்ப்புகளைப் பெறுவதில் தோல்வியடைகின்றனராம். இதேநிலைதான், எம்பிஏ மற்றும் எம்பிபிஎஸ் போன்ற படிப்புகளின் பட்டதாரிகளுக்கும் இருக்கிறதாம்.

உலகமயமாக்கல் தீவிரமான அமல்படுத்தப்படும் இந்நேரத்தில், இந்திய சந்தை பெரியளவில் விரிவடைந்து வருகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து தங்களின் தொழிலை தொடங்குகின்றன. எனவே, அவர்களுக்கு, ஆற்றல் வாய்ந்த மனிதவளம் அதிகளவில் தேவைப்படுகிறது. குறிப்பாக, எச்.ஆர், கிளையன்ட் சர்வீசிங், பப்ளிக் ரிலேஷன் போன்ற துறைகளில் அதிகளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதேசமயம், இத்துறைகளில் பணிபுரிய, சிறந்த மொழியாற்றல் அவசியம்.

தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள், அதிகளவு கல்வியறிவு விகிதத்தைக் காட்டினாலும், தகுதியான மனிதவளத்தை வளங்குவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மிகக்குறைந்தளவு பொறியாளர்களே, சிறந்த ஐடி நிறுவனங்களால் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த நிலையானது, வெறுமனே, அதிகளவில் பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் பல கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை மணியடிப்பதாய் உள்ளது. மாணவர்கள், தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்வதில் மட்டுமே கவனமாக இல்லாமல், தங்களின் மொழியறிவு உள்ளிட்ட ஒட்டுமொத்த திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் மொழித்திறன் மேம்பாட்டில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐஐடி டெல்லி போன்ற கல்வி நிறுவனங்கள், EnglishEdge போன்ற நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, மாணவர்களுக்கு, சிறந்த மொழித்திறன் பயிற்சி வழங்கப்படுவதை உறுதி செய்கின்றன.

Search this Site