வெளிநாடுகளில் எம்.பி.ஏ., படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா? | Kalvimalar - News

வெளிநாடுகளில் எம்.பி.ஏ., படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

எம்.பி..,வில் சேர அடிப்படையான தேர்வு ஜிமேட் தான் என்ற போதிலும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் எம்.பி.., படிக்க உங்களது ஆங்கிலத் திறனை அறிய உதவும் டோபல்/..எல்.டி.எஸ்., போன்ற தேர்வுகளில் ஒன்றிலும் தகுதி பெற வேண்டும். என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு சில பல்கலைக்கழகங்களின் எம்.பி.., படிப்புக்கு ஜிமேட் தேவைப்படுவதில்லை. எனவே எந்த பல்கலைகழகத்தில் எம்.பி.., படிக்க விரும்புகிறோமோ அதன் இன்டர்நெட் தளத்தைப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளலாம்.

ஜிமேட் தேர்வில் தகுதி பெறுவதோடு ஒன்றிரண்டு ஆண்டு பணி அனுபவத்தையும் மேற்குநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் வலியுறுத்துகின்றன. இந்தத் தேர்வில் 800க்கு 600 மதிப்பெண் பெறுவது அறிவுறுத்தப்படுகிறது. வெறும் ஜிமேட் அல்லது டோபல் தேர்வு மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தொடக்கத்திலிருந்தே எப்படி படித்திருக்கிறோம் போன்றவையும் படிப்பில் சேர உதவுகிறது

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us