மார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்? | Kalvimalar - News

மார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய வேகமான பொருளாதார வளர்ச்சிச் சூழலில் கன்ஸ்யூமர் எனப்படும் நுகர்வோர் தான் வாணிபத்தின் மையமாக இருக்கிறார். இதில் மார்க்கெட்டிங் பணியானது முக்கிய பங்கு வகிக்கிறது.பெரிய தொழில் நிறுவனங்கள், மார்க்கெட்டிங் நிறுவனங்கள், ஆலோசனை மையங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் மார்க்கெட்டிங் ரிசர்ச் அறிந்தவருக்கு தேவை இருக்கிறது.

தகவல்களை சேகரிப்பது, ஒழுங்குபடுத்துவது, அவற்றிலிருந்து நிறுனங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைத் தருவது என மார்க்கெட்டிங் ரிசர்ச் பணிகள் விரிவாக உள்ளன. பொதுவாக இப் பணியில் மேனேஜ்மென்ட், பொருளாதாரம், உளவியல், சமூகவியல், புள்ளியியல் போன்றவற்றில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தவர் ஈடுபடுகிறார்கள். கோல்கட்டாவில் உள்ள இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிடியூட் இத் துறையில் பி.எஸ்சி., ஹானர்ஸ் படிப்பைத் தருகிறது. பொறுமையும், விடாமுயற்சியும், சிறப்பான தகவல் தொடர்புத் திறனும் உள்ளவருக்கு இப் பணி நன்றாக பொருந்தும்

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us