அமெரிக்க கல்வி உதவித்தொகைகள்! | Kalvimalar - News

அமெரிக்க கல்வி உதவித்தொகைகள்!பிப்ரவரி 22,2017,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருக்கான அமெரிக்க உதவித்தொகை திட்டங்களை அறிவித்துள்ளது, யு.எஸ்.ஐ.இ.எப்., எனும் அமெரிக்க மற்றும் இந்திய கல்வி அறக்கட்டளை!

‘புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’

முதுநிலை பட்டப்படிப்பை அமெரிக்காவில் தொடர விரும்பும், கல்வியில் சிறந்த இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்!

தகுதிகள்: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், குறைந்தபட்சம் 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பில், குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாடப்பிரிவுகள்: சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் ஆய்வு, உயர் கல்வி நிர்வாகம், சர்வதேச சட்டக் கல்வி, பொது சுகாதாரம், பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு, நகர்ப்புற மற்றும் பிராந்திய வடிவமைப்பு, கலை மற்றும் கலாசார மேலாண்மை, பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு துறையில், மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பை தேர்வு செய்யலாம்.

உதவித்தொகை: ஜே-1 விசா, கல்விக் கட்டணம், இதர வசிப்பிட செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

‘புல்பிரைட்-நேரு டாக்டோரல் ரீசர்ச் பெலொஷிப்’

இந்திய பல்கலைக்கழகங்களில் பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற்ற கல்வியில் சிறந்த மாணவர்கள், அமெரிக்காவில் 9 மாதம் வரை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பை இந்த உதவித்தொகை திட்டம் வழங்குகிறது!

பாடப்பிரிவுகள்: பயோ இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், வேளாண்மை, கணினி அறிவியல், பொருளாதாரம், சர்வதேச சட்டக் கல்வி,  நரம்பியல், கல்வி கொள்கை மற்றும் திட்டமிடல், வரலாறு, மானுடவியல் பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு உள்ளிட்ட துறைகள். பிஎச்.டி., பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை: உதவித்தொகை திட்ட காலங்களான 6 முதல் 9 மாதங்கள் வரையிலான கல்வி கட்டணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவ காப்பீடுபோன்ற செலவுகள் அனைத்தும் இதில் அடங்கும்.

பிஎச்.டி., நிறைவு செய்தவர்கள் அல்லது நிறைவு செய்யும் நிலையில் இருப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.


‘புல்பிரைட்-நேரு போஸ்டு டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப்’

ஆராய்ச்சி திறனை தொடர்ந்து மேம்படுத்த விரும்பும் பிஎச்.டி., பட்டம் பெற்ற இந்தியர்களுக்கான பிரத்யேக உதவித்தொகை திட்டம்!

துறைகள்: பயோ இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், வேளாண்மை, கணினி அறிவியல், பொருளாதாரம், சர்வதேச சட்டக் கல்வி, நரம்பியல், கல்வி கொள்கை மற்றும் திட்டமிடல், வரலாறு, மானுடவியல், பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு, பொது கொள்கை, பொது சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகள்.

தகுதிகள்: சமீபத்திய 4 ஆண்டுகளில், பிஎச்.டி., நிறைவு செய்தவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: தேர்வு செய்யும் பாடத் துறைகளுக்கு ஏற்ப 8 முதல் 24 மாதங்கள் வரை கல்விக் கட்டணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.


‘புல்பிரைட்-நேரு அகடெமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்‘

ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படும் பிரத்யேகமான உதவித்தொகை திட்டம்!

துறைகள்: மெட்டீரியல் சயின்ஸ், பயோ இன்ஜினியரிங், பருவநிலை மாறுபாட்டு அறிவியல், வேளாண்மை, கணினி அறிவியல், பொருளாதாரம், சர்வதேச சட்டக் கல்வி, நரம்பியல், கல்வி கொள்கை மற்றும் திட்டமிடல், வரலாறு, மானுடவியல் பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு, பொது சுகாதாரம், பொது கொள்கை உள்ளிட்ட துறைகள்.

உதவித்தொகை: ஒரு சர்வதேச விமான பயணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படும்.

கால அளவு: தேர்வு செய்யும் பாடத் துறைக்கு ஏற்ப 8 முதல் 9 மாதங்கள் வரை.

விண்ணப்பிக்கும் முறை: புல்பிரைட்-நேரு அனைத்து உதவித்தொகைக்கும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 15

விபரங்களுக்கு: www.usief.org.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us