‘நவீன பயிற்சி’ | Kalvimalar - News

‘நவீன பயிற்சி’ஜூன் 27,2018,17:46 IST

எழுத்தின் அளவு :

கடந்த 25 ஆண்டுகளாக சேவை நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் சங்கரா கல்வி நிறுவனங்களின்கீழ், தற்போது பாலிடெக்னிக், கலை அறிவியல் மற்றும் மேலாண்மை ஆகிய மூன்று விதமான கல்லூரிகள் செயல்படுகின்றன!

‘இ-லேர்னிங்’ வளாகம்
தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ள இந்த கோவை மாநகரில், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை எளிதாக்கும் வகையில், நவீன பயிற்சி அளிக்கிறோம். குறிப்பாக, இ-லேர்னிங் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் வளாகமாக, எங்கள் கல்வி நிறுவனம் திகழ்கிறது. கம்ப்யூட்டர் மூலமாக எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள், அவர்களது பாடத்திட்டங்களை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் மாணவருக்கு பிரத்யேக ‘ஐ.டி.,’ மற்றும் ‘பாஸ்வேர்டு’ வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பேராசிரியர்களுடன் கலந்துரையாடி மாணவர்கள், அவர்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெறவும் முடியும்!

ஒருமுறை, தினமலரின் வழிகாட்டி நிகழ்ச்சியின் போது, ‘காது கேளாத, வாய்பேசாத மாணவ, மாணவிகளை உங்கள் கல்வி நிறுவனத்தில் சேர்க்க வாய்ப்பு உண்டா?’ என்று எங்களிடம் சில பெற்றோர்கள் கேட்டனர். அதுமுதல், இரண்டு பிரத்யேக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து, காது கேளாத, வாய்பேசாத மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு கல்வி அளித்து வருகிறோம். சேவை நோக்கத்தோடு செயல்படும் கல்வி நிறுவனம் என்பதால், அவர்களுக்கும் சிறந்த கல்வி அளிப்பதை எங்களது கடமையாகவே கருதுகிறோம்.

மேலும், எங்களது கல்வி நிறுவனங்களில், பயிற்சி அடிப்படையிலான கல்வி வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பை பொறுத்தவரை, ‘கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்’ மிக அவசியம். அதற்காக, ஆங்கிலத்தில் தான் கட்டாயம் புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. எந்த மொழியாக இருந்தாலும், அந்த மொழியில் ஒருவர் நினைப்பதை தன்னம்பிக்கையுடன் தெளிவாகவும், சரியாகவும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய பயிற்சியையும் எங்களது மாணவர்களுக்கு வழங்குகிறோம். 3 மாதகால இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கிறோம். அதன்மூலம், தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை உணர்ந்து, அதற்கேட்ப மாணவர்களால் திறம்பட செயலாற்ற முடிகிறது.

‘வீழ்ச்சி கண்டதில்லை’
இன்றைய நிலையில், பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு என்பது சுலபமாகிறது. இன்னும் சொல்லப்போனால், 100 சதவீத வேலைவாய்ப்புடன் என்றுமே வீழ்ச்சி அடையாத படிப்பாக திகழ்கிறது. பாலிடெக்னிக் படிப்பை போன்று, கலை அறிவியல் படிப்புகளும் என்றுமே வீழ்ச்சியைக் கண்டதில்லை.

குறிப்பாக, பி.காம்., படிப்பு பல ஆண்டுகளாக, மாணவர்கள் மத்தியில் மிகப் பிரபலாமாக உள்ளது. அதேபோல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கும் ஏராளமான வாய்ப்புகள் இன்று குவிந்து கிடக்கின்றன. உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, நட்சத்திர ஹோட்டல்களில் உடனடி வேலை கிடைக்கிறது. எனினும், இப்படிப்பு குறித்து இன்னும் மாணவர்களும், பெற்றோரும் விழிப்புணர்வு பெற வேண்டும்!

-நித்யா ராமச்சந்திரன், துணை கூடுதல் செயலர், சங்கரா கல்வி நிறுவனங்கள், கோவை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us