ஜிஏடிஇ தேர்வில் உங்களின் இலக்கு என்ன? | Kalvimalar - News

ஜிஏடிஇ தேர்வில் உங்களின் இலக்கு என்ன?

எழுத்தின் அளவு :

எம்.இ மற்றும் எம்.டெக் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வே ஜிஏடிஇ தேர்வாகும். பெங்களூரின் ஐ.ஐ.எஸ்சி மற்றும் 7 ஐஐடி -களின் ஒருங்கிணைப்புக் குழுவால், இத்தேர்வு நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பின் போது, BHEL, IOCL, HPCL, NTPC போன்வற்றால், இத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.

தேர்வின் சாரம்

மொத்தத்தில், ஒரு மாணவர், தனது இளநிலை பொறியியல் படிப்பில் எவ்வாறு செயல்பட்டுள்ளார், பாட அம்சங்களை எவ்வாறு உள்வாங்கியுள்ளார் என்பது குறித்து ஆராய்வதே இத்தேர்வின் நோக்கம். கருத்தாக்கம் மற்றும் அதன் பயன்பாடுகளும் சோதிக்கப்படுகிறது.

1 மதிப்பெண் மற்றும் பொருத்துக பகுதியில் இடம்பெற்ற கேள்விகள் கருத்தாக்கம் பற்றியும், 2 மதிப்பெண் கேள்விகள்(பொதுவாக கணிதம் தொடர்பானது) பயன்பாடுகள் குறித்தும் மதிப்பிடுகின்றன.

புதிய தேர்வுமுறை

2013ம் ஆண்டின் GATE தேர்வானது, 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதி, ஆன்லைனில் 15 தாள்கள் நடத்தப்படவுள்ளன. அவற்றில் முக்கியமானவை, சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவை. ஆப்லைன் தேர்வுகளைப் பொறுத்தவரை, எலக்ட்ரானிக்ஸ், கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் ப்ரொடக்ஷன் ஆகிய இன்ஜினியரிங் துறைகள் இடம்பெறும். இந்த ஆப்லைன் தேர்வு 2013, பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும்.

இதுத்தவிர, கேட் தேர்வு மதிப்பெண்களை கணக்கிடும் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதி மதிப்பெண்களை கணக்கிடுவதில், historical data பயன்படுத்தப்படுகையில், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 0.1% முதல்நிலை தேர்வர்களின் தேர்வு செயல்பாடு, முக்கியப் பங்கு வகிக்கும்.

வெவ்வேறு இலக்குகள் - வெவ்வேறு வியூகங்கள்

GATE தேர்வுக்கு தயாராவதில் முதல் நிலை, concepts தொடர்பாக நன்கு புரிந்து கொள்ளுதலாகும். தங்களின் முதலாண்டு பொறியியல் படிப்பிலிருந்தே, இப்பணியை தொடங்குதல் மிகவும் சாலச்சிறந்தது. மேலும், முறையாக பாடங்களை, தவறாமல் படித்து வருதலென்பது, பல்கலைக்கழகத் தேர்வுக்கு பெரிதும் கை கொடுக்கும். இத்தகைய அடிப்படை தயாராதலின் மூலமாக, GATE தேர்வை எளிதாக வெல்ல முடியும். ஏனெனில், இத்தேர்வு, பாடத்திட்டத்தின் சிறிய நீட்சிதான்.

அதேசமயம், இளநிலைப் படிப்பின், 3ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டில் இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டத்தின் முழு அம்சத்தையும் உள்வாங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, இத்தகைய கடைசிநேர சிரமத்தை தவிர்க்க, வகுப்பறை கற்றலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் ஆசிரியரின் உதவியும் முக்கியமானது.

சரியான திட்டமிடல்

கேட் தேர்வுக்கு, சிறந்த திட்டமிடுதலுடன் கூடிய தயாரிப்பு அவசியம். உங்களின் இலக்கிற்கு ஏற்ற வகையில் தயாரிப்பை மேற்கொள்ளுங்கள், அதற்கான சில ஆலோசனைகள்,

* ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்பு சேர விரும்பினால், நீங்கள் 1000 ராங்கிற்குள் எடுக்க வேண்டியிருக்கும். இதற்கு, நீங்கள் எந்த பாடப் பகுதியையும் உதாசீனம் செய்யாமல், அனைத்தையும் கவனமாக படிப்பது அவசியம்.

* அதேசமயம், தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என நினைத்தால், முக்கியமான பாடப்பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தலாம்.

* பொறியியல், கணிதம் மற்றும் பொதுத்திறன் ஆகிய பகுதிகள் 30% மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. அதேசமயம், இப்பகுதிகள் சற்று சிக்கலானவையும்கூட.

* இ.சி.இ பாடத்தில், எலக்ட்ரானிக் டிவைசஸ் எனும் பகுதிக்கு 2-4% மதிப்பெண்களே வழங்கப்படுகின்றன. ஆனால், அதற்கு தயாராகும் நேரம் அதிகம்.

மேற்கூறிய அம்சங்களை புரிந்துகொண்டால், நன்றாக திட்டமிடலாம்.

மதிப்பாய்வு செய்யவும்

கடந்த சில ஆண்டுகளாக, GATE தேர்வின் Patterns எவ்வாறு உள்ளன மற்றும் சிக்கலான பகுதிகள், சிக்கலற்ற பகுதிகள் ஆகிய அம்சங்களை அலசி ஆராய்வது நன்மை பயக்கும்.

வெளி ஆலோசனை அல்லது சுய படிப்பு

வகுப்பறை பயிற்சி அல்லது ஆன்லைன் பயிற்சியானது, கருத்தாக்கங்களை சிறப்பாக புரிந்துகொள்ள உதவி செய்வதோடு, உங்களின் முயற்சிகளை சரியான திசையில் கொண்டு செல்லவும் உதவும். பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி கேள்விகள் போன்றவை, இதன்மூலம் கிடைக்கப்பெறும்.

சுயமாக படித்தல் என்பது, ஒரு மாணவரின் அசாத்திய தன்னம்பிக்கையை குறிக்கிறது. கடினமான கருத்துக்களை தானே புரிந்துகொள்ளல் மற்றும் வெளி ஆலோசகரின் உதவியின்றி கிரகித்தல், மற்றவரின் உற்சாகம் மற்றும் தூண்டுதல் இல்லாமலேயே அதிக முயற்சி எடுத்து படிப்பது போன்றவை இதில் அடங்கும்.

தேர்வுக்கு தயாராதல்

ஒரு பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன்பாக, அது பலவிதங்களில் சோதனை செய்யப்பட வேண்டும். அதைப்போலத்தான் இதுவும். தேர்வுக்கு அமரும் முன்பாக, நீங்கள் தெளிவாக படித்து விட்டீர்களா? கடினமான பகுதிகளை தெளிவாகப் புரிந்து கொண்டீர்களா?, உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொண்டீர்களா?, தேர்வு தொடர்பாக ஏற்படும் மன அழுத்தத்தை தாங்கும் பக்குவம் பெற்று விட்டீர்களா? என்ற பலவாறான கேள்விகளை மனதில் கொண்டு, தயார் செய்துகொள்வதே, முழு வெற்றிக்கான அடிப்படை.

மாதிரித் தேர்வுகள்

GATE தேர்வுக்கான தயாராதலில், மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் புரிந்துகொண்டு செயலாற்றுவதுடன், மாதிரித் தேர்வுகளை எழுதுவதும் அவசியம் தேவையான ஒன்று. அதிலும், அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் ஒரு தேர்வுக்கு, மாதிரித் தேர்வு பயிற்சி என்பது இன்றியமையாதது.

2013ம் ஆண்டு புதிதாக, 15 தாள்கள் ஆன்லைனில் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கு அனுபவம் புதிதாக இருக்கும். OMR தாளில், பென்சிலில் shade செய்வது, அதற்கு எடுத்துக்கொள்ளும் காலஅளவு போன்ற பலவித அனுபவங்கள், இந்தமுறை மாணவர்களுக்கு புதிதாக இருக்கும்.

உங்களின் செயல்பாடு எப்படி?

ஒவ்வொரு தேர்வு முடிந்தபின்பும், அதில் உங்களது செயல்பாட்டை மதிப்பிட்டு, அதனடிப்படையில், அடுத்த தேர்வுக்கு தயாராதல் முக்கியமானது. பலவீனத்தை, உடனடியாக பலமாக மாற்றிவிட முடியாது. ஆனால், கடினமான, திட்டமிட்ட முயற்சிகளின் மூலமாக அதை சாத்தியமாக்கலாம்.

எனவே, அனைத்துமே உங்கள் கைகளில்!

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us