டில்லியிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் இத்துறையில் முக்கியமான கல்வி நிறுவனம். இதன் படிப்புகள் மிகச் சிறப்பானவை. முழு நேர 15 மாத பி.ஜி. , டிப்ளமோ படிப்பை இந்த நிறுவனம் தருகிறது. இதற்கான கட்டணம் தான் அதிகம். 15 மாத படிப்புக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் பெறப்படுகிறது. இது தவிர ஒரு ஆண்டு அட்வர்டைசிங் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஸ் படிப்பையும் இது தருகிறது. இதற்கான கட்டணம் ரூபாய் ஒரு லட்சம். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக இப்படிப்புகளில் சேரலாம். இந்த நிறுவனத்தில் படித்தவர் எவரெஸ்ட் அட்வர்டைசிங், லோவ், மெக்கான் எரிக்ஷன், பெர்சப்ட் அட்வர்டைசிங், முத்ரா கம்யூனிகேஷன்ஸ், ஆக்ளிவி மேத்தர், ரீடிபியூசன், அவுட்லுக், டைம்ஸ் குழுமம் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் கூடிய சிறப்புப் பணி வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். இதன் இன்டர்நெட் முகவரிwww.niaindia.org