‘சிந்தித்து செயலாற்றுங்கள்’ | Kalvimalar - News

‘சிந்தித்து செயலாற்றுங்கள்’மார்ச் 23,2018,10:15 IST

எழுத்தின் அளவு :

நாட்டில் நிலவும் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண, விஞ்ஞானிகள் முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு அவர்கள் ‘அவுட் ஆப் த பாக்ஸ்’ சிந்தித்து செயல்பட வேண்டும்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் அறிவியல் சாதனைகள் என்றுமே தாழ்ந்துவிடவில்லை. எனினும், இந்தியாவில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளம் உள்ளது. அவற்றிற்கு அறிவியல் ரீதியாக முறையான தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து, விஞ்ஞானிகள், அவர்களது இதயம் மற்றும் ஆன்மாவிலிருந்து உணர்வுப்பூர்வமாக செயலாற்ற வேண்டும்.

நம் நாடு சந்தித்துவரும் வெகுகால தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிய வழிகளை கண்டறிய வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆகிய இரண்டும் இணைந்து செயல்பட்டால் தான், சுற்றுச்சூழலால் அறிவியலும், அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுற்றுச்சூழலும் பயனடையும்.

-ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us